பெண்கள்மெடிக்கல்

பேலியோ டயட்

பல பெண்கள் தங்களது உடல் எடையை குறைக்க டயட் மேற்கொள்கின்றனர். ஆனால் டயட் மீது எல்லோருக்கும் ஏதோ ஒரு சந்தேகம் இருக்கின்றது. அப்படி சமீப காலமாக பேலியோ டயட் இருக்கும் பெண்களின் அளவு அதிகரித்துள்ளது. ஏனெனில் இதில் நல்ல பலன் உள்ளது என்று.

இந்த டயட் சுத்தமானது. நாம் வழக்கமாகச் சேர்க்கும் செயற்கை சேர்க்கைகளான பிரிசர்வேட்டிவ்ஸ், செயற்கை சுவையூட்டிகள் ஆகியவை இதில் தவிர்க்கப்படுகின்றன. ஃபிரெஷ்ஷான காய்கறிகளைச் சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். செடிகளில் உள்ள ஆன்டி-இன்ஃப்ளேமேட்டரி (Anti- inflammatory) என்னும் நன்மை தரும் பொருள் நமக்குக் கிடைக்கும்.

`ரெட் மீட்’ எனப்படும் ஆடு மற்றும் மாட்டு இறைச்சி உண்பதால், உடலில் அதிக அளவில் இரும்புச்சத்து சேரும். அதிக அளவில் புரதம் மற்றும் நல்ல கொழுப்புச்சத்து சாப்பிடுவதால் திருப்தியான உணர்வு ஏற்படும்
குறைந்த உணவு வகைகளை உண்பதால், உடல் எடை குறையும்.

பேலியோ வகை வாழ்க்கை முறை இன்சுலின் சுரப்பைத் தூண்டி, சர்க்கரைநோய் வராமல் தவிர்க்கும். சர்க்கரைநோய் இருப்பவர்களுக்கு அது தீவிரம் அடையாமல் பார்த்துக்கொள்ளும். இந்த டயட்டை பின்பற்றுபவர்களுக்கு புற்றுநோய், சர்க்கரை மற்றும் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
எந்த டயட்டாக இருந்தாலும் சரி உங்கள் மருத்துவரை அணுகாமல் அதை துவங்க வேண்டாம் என்பதை மறக்க வேண்டாம்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

11 + 18 =

Related Articles

Close