ஆர்ப்பாட்டம்செய்திகள்

பேரையூரில் சாலை வசதி கேட்டு 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல்

More than 300 villagers blocked the road demanding road facility in Beraiyur

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூர் தாலுகாவில் உள்ள P. ஆண்டிபட்டி கிராமத்தில், கடந்த பல ஆண்டுகளாக சாலை படு மோசமாக குண்டும், குழியுமாகவும், பள்ளி மாணவ, மாணவிகள் முதல் முதியோர்கள் வரை நடந்து செல்ல முடியாத அளவிலும், இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலையும் உள்ளது.

பலமுறை வட்டாட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பேரையூர் – டி. கல்லுப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் 300க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் .இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் சாலையில் அமர்ந்து தங்களுக்கு சாலை வசதி செய்து தரக்கோரி கண்டன கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இம்மறியல் காரணமாக 30 நிமிடம் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . இதனை தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போது சிறிது நேரம் வாக்குவாதத்துடன் போராட்டம் நிறைவு பெற்றது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: