அமைச்சர்செய்திகள்

பேரிடர் காலங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தவறிவிட்ட திமுக அரசு | ஆர்.பி. உதயகுமார் பேட்டி

DMK government failed to take precautionary measures during calamities RB Interview with Udayakumar

திருமங்கலம் தொகுதி கரடிக்கல் அனுப்பப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் வினோத்குமார் மற்றும் அன்பரசன் உள்ளிட்ட ஆறு பேர் திருவேடகம் அருகே உள்ள வைகை ஆற்றில் குளிக்க சென்றனர். இதில், வினோத்குமார் ,அன்பரசன் ஆகியோர் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதில் ,அன்பரசன் மட்டும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். காணாமல் போன வினோத்குமார் உடலை தேடப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற எதிர்க்கட்சிதுணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் ,
தீயணைப்பு துறைகளால் வைகை ஆற்றில் தேடப்பட்ட வரும் இடத்தினை நேரில் வந்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, தீயணைப்பு துறை அதிகாரி இடமும், வருவாய்த்துறை அதிகாரிகளும் நிலைமை கேட்டறிந்தார்.

ராணுவ வீரர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மதுரை,தேனி ஆகிய பகுதிகளுக்கு தென்மேற்கு பருவமழை காரணமாக முல்லைப் பெரியாறு இருந்து தண்ணீர் மற்றும் மழை நீர் வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அம்மா அவர்கள் தீர்ப்பினை பெற்று தந்தார்கள்.

தற்போது, ரூல்கர்வ் கடைபிடித்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது தான் முல்லைப் பெரியாறு குறித்து, முதலமைச்சர் நீண்டநாள் கழித்து விளக்கம் அளித்து உள்ளார்.
5 மாவட்ட விவசாயிகளின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்று, எடப்பாடியார் வலியுறுத்தி வருகிறார்.

மக்களுக்காக திட்டங்களை தவிர திட்டத்திற்கான மக்கள் என்பது கூடாது, ஆகவே முல்லை பெரியார் விவகாரத்தில் சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது, வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற ஆறு பேரில் இருவர் தண்ணீரில் சிக்கி ஒருவர் உயிரிழந்து உள்ளார். மற்றொருவரை தேடி வருகின்றனர். இவர், ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ராணுவப் பணியை முடித்துக் கொண்டு விடுப்பில், தன் வீட்டுக்கு கூட செல்லாமல் நண்பருடன் சேர்ந்து ஆற்றில் குளித்த போது அடித்துச் செல்லப்பட்டது வேதனை கவலை அளிக்கிறது.

நாட்டை காக்கும் ராணுவவீரர் எப்படியாவது உயிரோடு இருக்க வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறோம். இது போன்ற மழைக் காலங்களில் ஆற்றில் குளிக்க கூடாது, ஆடுமாடுகளை குளிக்க வைக்க கூடாது, துணிமணிகள் துவைக்க கூடாது, இதைத்தான் கடந்த அம்மா ஆட்சிக்கு ஏற்பட்ட அனுபவத்தை அரசுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறோம்.பொதுவாக, தென்மேற்கு பருவமழை என்பது அண்டை மாநிலங்களில் இருந்து நமக்கு வரும்.

ஆனால், வடகிழக்கு பருவமழை என்பது முழுக்க முழுக்க தமிழகத்துக்கு மட்டுமே வரும் . இதில், பெய்யும் 49 சதவீதம் மழை குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படும். ஏற்கனவே, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார், மழைக்காலங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காவிரி ஆற்றை முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்று என்று அரசை வலியுறுத்தினார்.

பேரிடர் காலங்களை மூன்று நிலையாக கடந்த அம்மா காலத்தில் கடைபிடிக்கப்பட்டது. குறிப்பாக, வெள்ளம் வருவதற்கு முன்பாக போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும், அதை எடுக்க திமுக அரசு தவறியதால் தான், இன்றைக்கு மேட்டூரில் 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப் பட்டுள்ளது.

அதேபோல், போன்ற சூழ்நிலை வைகை அணையில் உள்ளது, இந்த திமுக அரசு பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற உயிர்ப்பலி ஏற்பட்டிருக்காது.

மதுரையில் ,சில நாட்களுக்கு முன்பாக கனமழையால் நான்கு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதுவரை ,அவர்களுக்கு எந்த நிவாரண உதவியும் கொடுக்கவில்லை. இது போன்ற காலங்களில் அம்மாவின் ஆட்சியில் எடப்பாடியார் 10 லட்சம் வரை உயிரிழந்த குடும்பங்களுக்கு கொடுத்தார்.

அதேபோல், மீனவர்களுக்கு 20 லட்சம் வரை கொடுத்தார். மேலும், விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்கள், காப்பீட்டு தொகைகள், இடுபொருள்கள் போன்றவற்றை உடனுக்குடன் வழங்கப்பட்டுள்ளது.

எடப்பாடியார் தற்போது ,பழனி, காங்கேயம், தர்மபுரி போன்ற மாவட்டங்களுக்கு செல்கிறார்.
போகும் வழியெல்லாம் மக்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர், எந்தவித அறிவிப்பும் இல்லாமல் எடப்பாடியார் வரும்பொழுது தொண்டர்கள் திரண்டு வருகிறார்கள்.

ஆனால் ,சிலர் தென் மாவட்டத்திற்கு வருகை தரும் போது அறிவிப்பு தருகின்றனர். ஆனால், எதிர்பார்த்த கூட்டம் இல்லாததால் அவர்களுக்கு தோல்வி அடைந்துள்ளது. ஆகவே இன்றைக்கு கட்சியும், கழகத் தொண்டர்களும் எடப்பாடியார் பக்கம் தான் உள்ளார்கள் என்று கூறினார்.

இதில் ,வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, அம்மா பேரவை துணைச் செயலாளர் துரை தன்ராஜ் மாணவரணி மகேந்திர பாண்டி, சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், பேரூர் கவுன்சிலர் ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜன், சோழவந்தான் ஏழாவது வார்டு செயலாளர் எஸ். பி. மணி ,கருப்பட்டி கருப்பையா.ஒன்றிய கவுன்சிலர்
தங்கப்பாண்டி, மேலக்கால் ஊராட்சி செயலாளர் காசிலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: