
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி அம்பேத்கரை நகரை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் பாண்டியராஜன் வயது 22.
இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வேலை முடித்து வீடு திரும்பிய பொழுது, அந்த வழியாக இருச் சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் பாண்டியராஜனிடம் கத்தியை காட்டி ரூபாய் 1500 ஐ பறித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்ததை அடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகைள தேடி வந்த நிலையில், கீரைத்துறையைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் (வயது 24), சக்திவேல் (வயது 23), செந்தூர் ராஜ் வயது 21 ஆகியோர் பாண்டிய ராஜனிடம் வழிப்பறி செய்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்யப்பட்டு, அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1