
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி மருதுபாண்டியர் சிலை அருகே, திண்டுக்கல் மாவட்டம் தேத்தம்பட்டியைச் சேர்ந்த முருக பாண்டியன் (வயது 46) என்பவர் டாட்டா ஏஸ் சரக்கு வாகனத்தை ஒட்டி வந்தார்.
அப்போது ஜெய்ஹிந்புரம் தேவர் நகரை சேர்ந்த சிக்கந்தர் பாட்ஷா மகன் அப்துல் கலாம் (வயது 20) மற்றும் அவரது நண்பர் ஜெய்ஹிந்புரம் பகுதியைச் சேர்ந்த ராஜா முகமது மகன் ரஹீம் (வயது 23) இருவரும் யமஹா பைக்கில் பெருங்குடி நோக்கி சென்ற போது மருதுபாண்டியர் சிலை அருகே எதிரே வந்த சரக்கு வாகனத்தில் மோதியதில் சம்பவ இடத்திலே தலையில் காயம் ஏற்பட்டு இருவரும் பலியானர்கள்.
இது குறித்து அவனியாபுரம் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் சாலை விபத்தில் பலியான அப்துல் கலாம், ரஹீம் இருவரது உடலையும் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
தலைக்கவசம் அணியாத காரணத்தால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்துள்ளனர். ஆதலால் தலை கவசத்தை அணிந்து பைக் ஓட்டும்படி காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சாலை விபத்தில் இளைஞர்கள் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துயுள்ளது.