
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் பசு மாடு ஒன்று தவறுதலாக விழுந்தது.
இந்நிலையில் மாடு கழிவு நீரில் சிக்கிக் கொண்டு, சத்தமிட்டது. இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக, நிலைய அலுவலர் சேகர் தலைமையிலானக் குழு சம்பவ இடத்திற்கு வந்து பசு மாட்டை நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.
மேலும் சாலைகளில் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் பொறுப்பற்ற முறையில் கட்டவிழ்த்து விடுவதால் இது போன்ற அசம்பாவிதங்கள் அடிக்கடி நிகழ்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1