பெட்ஸ்வீடியோஜல்லிக்கட்டு

பூலாம்பட்டி முனியாண்டி காரிகாளை | 50 வாடியில் சிக்காத கோயில் மாடு

Poolampatti Muniyandi Kaari kalai | Temple cow

#காரிகாளை #பூலாம்பட்டி #ஜல்லிக்கட்டு

பயண அனுபவம்

பூலாம்பட்டி எனும் சிறு கிராமம் யானைமலையில் இருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. முகநூலில் பூலாம்பட்டி காரி காளை புகைப்படத்தை பார்த்துவிட்டு, திரு.ராஜ்குமார் அவர்களை தொடர்பு கொண்டேன். ரொம்ப சந்தோசம் அண்ணே நீங்களே போன் செய்ததுக்கு. கண்டிப்பா பசங்கட்ட பேசிட்டு கூப்பிடுறேன் என்று கூறியவர், அடுத்த இரு நாட்களில் அழைத்தார். ஞாயிற்றுக் கிழமை வர்றீங்களா அண்ணே என்று… நானும் உறுதியளித்தேன்.

அதன்பின்புதான் தெரிந்தது அன்றைய தினம் முகூர்த்தம் என்று. நெருங்கிய நண்பர் திரு.உமாபதி அவர்களது புதல்விகள் இருவருக்கும் மடப்புரத்தில் மொட்டையடித்து காது குத்து, தம்பதிகளாக வந்து பத்திரிக்கை வைத்து அழைப்பு. என்ன செய்ய, அன்றைக்கு கேமரா தம்பிக்கும் வேறு ஒரு நிகழ்வு. தனியாகவே கிளம்பினேன். நான்கு வழி சாலையில் நின்று கொண்டிருக்க, பூலாம்பட்டிக்கு , திரு.ராஜ்குமார் அழைத்துச் சென்றார்.

நெல் சாகுபடி வழி யெங்கும். சிறிது நேரத்தில் பூலாம்பட்டிக்கு சென்றுவிட்டோம். காரி காளை, கோயில் காளைகள் தயார்படுத்தப்பட்டிருந்தது. அந்த கிராமமே அவ்வளவு வரவேற்பு. குழந்தைகள் முதல் பெண்கள் வரை பாசக்காரங்க. எனக்கு தனியாக இருப்பதுபோல் தோன்றவில்லை. அங்கிருந்த எல்லோரும் சிறிது நேரத்தில் பழகிவிட்டார்கள். அன்னைக்கு எனக்கு பல அசிஸ்டென்ட்கள். கூடவே பேக்கு, கேமரா, டிரைப்பேடு னு எல்லாத்தையும் தூக்கி சுமந்தாங்க. அவுங்க எல்லோருக்கும் எனது நன்றிகள்.

கேமரா வீடியோ பதிவில் அதிக அனுபவம் இல்லை. முடிந்த வரை முயற்சி செய்துள்ளேன். நிச்சயமாக நிறைய பிழைகள் இருக்கிறது. இனி அதையும் கற்றுக் கொள்கிறேன். இந்த வீடியோ இவ்வுளவு தூரம் சாத்தியமானதற்கு அந்த ஊர் இளசுகள்தான். என்ன தேவை என்பதை முதலில் புரிந்து கொண்டு அதை செய்து கொடுத்தார்கள்.

அங்கிருந்தவர்கள் காட்டிய ஆர்வமும், ஆசையும் எனக்கு களைப்பை ஏற்படுத்தாமல் உற்சாகத்தை கொடுத்தது. இன்னும் அழகாக பதிவு செய்திருக்கலாம் என்பது மட்டும் எனக்கு புரிந்தது. ஆலமர நிழலும், கண்மாய் கரையும், இதமான காற்றும், அன்பான மனிதர்கள் என எல்லாமே எனக்கு பிடித்து போய்விட பசியே எடுக்கவில்லை. ஆனால் அவர்கள் விடுவதாக இல்லை. சாப்பிட்டே தீர வேண்டும் என்று, ஒரு அருமையான சைவ சாப்பாடு மந்தையில் பூர்த்தியானது.

அதன் பிறகு சால்வை அணிவித்து மரியாதையும் எனக்கு செய்யப்பட்டது. இதுபோன்ற மரியாதைகளை விரும்பாதபோதும், இவர்கள் போன்றவர்கள் செய்வதை எப்படி தடுப்பது. அந்த சால்வை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும் என்பதால் மறுக்காமல் போர்த்திக் கொண்டேன். அந்த புகைப்படத்தை வீடியோவில் பதிய மறந்துவிட்டேன். www.hellomadurai.in இணையதளத்தில் பதிவு செய்கின்றேன்.

மீண்டும் எவ்வளவோ மறுத்தும், போக்குவரத்துக்கு தேவையான செலவுகளையும் செய்து கொடுத்தார்கள். இதற்கு இடையில் திரு.ராஜ்குமார் காணாமல் போய்விட்டார். எங்கே என்று கேட்க, விஷேசத்திற்கு சென்றுள்ளதாக தெரியவர, சாப்பாட்டுக்குள் வந்துவிட்டார். பார்த்தீங்களா நீங்க மட்டும் விஷேசத்திற்கு சென்று வந்துவிட்டீர்கள், நான்தான் போக முடியவில்லை என்று சிரித்துக் கொண்டே கூற, பேட்டி கொடுத்த திரு.சங்கர் அண்ணன் எங்க போகணும் என்று கேட்க, மடப்புரம் என்று கூற, இங்கிருந்து அரை மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்றார்.

அதற்கான வழியை கூறி, என்னை வழி அனுப்பிவைத்தனர். நானும் அங்கிருந்து கிளம்பி இடையபட்டி வழியாக, பூவந்தி அடைந்து மடப்புரத்திற்கு வந்தேன். வழி எங்கும் பூலாம்பட்டி கிராமம் எனக்குள் பூத்துக் கொண்டே இருந்தது. மறக்க முடியாத அனுபவம். அந்த கிராம மக்களின் நேசிப்பு அளவிட முடியாத ஒன்று. நான் சாப்பிடும்போது ஒரு அம்மா, எனக்கு டீ போட்டு ஆசையாக கொண்டு வந்தாங்க, அவுங்களுக்கு நா குடிக்காதது கொஞ்சம் வருத்தம்தான். அண்ணன்கள் குடித்துவிட்டார்கள்.

அந்த அம்மா…. எங்க ஊரைப் பற்றி நல்லா சொல்லுங்கப்பா, இந்த ஊரு ஜல்லிக்கட்டுனா போதும், தங்கமான பசங்க, பாரம்பரியமா மாடு வளர்க்கும் கிராமம் என்றதும், அங்குள்ள இளசுகள் ஏய்… என்ன… போறீயா… சாப்பிட்டு இருக்குராருல… நல்லா தண்ணீல டீ ய போட்டு கொண்டு வந்து… பேசுற… பேச்சப்பாரு… என்று கலாய்க்க… நானும் அப்பொழுது சிரித்து கொண்டதை… வழியில் நினைத்துக் கொண்டேன்.

கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய …

“சின்னஞ் சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு – அட
அட சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு – அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு”

பாடல் வரிகள் ஞாபகம் வந்தது.

பிறகு என்ன மடப்புரம் வந்து நண்பரின் இல்ல விழாவில் கலந்து கொண்டு, அவர்கள் உட்பட நானும் மகிழ்ந்தேன். வேறு ஒரு பயண அனுபவத்தில் உங்களை சந்திக்கின்றேன்.

நன்றிகள் !!
___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 📞 95 66 53 1237. ( Reporter – Whats app )
Hello Madurai Raj – 📞 6382333644 ( Camera Man )
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

🔵 App Link: https://play.google.com/store/apps/de…

🔵Online Web Tv : https://hellomaduraitv.com/

🔵 Facebook :https://www.facebook.com/hellomaduraitv

🔵 Hello Madurai News website : https://hellomadurai.in/

🔵 Agri News website : https://tamilvivasayam.com/

🔵 Amma Samaiyal Food website : https://ammasamaiyal.com/

🔵 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: