
ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசர கால ஊர்தி 108 நிறுத்த அனுமதி மறுப்பு மருத்துவரின் கார் நிறுத்துவதற்காக ஏற்பாடு என குற்றச்சாட்டு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா*
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு புதூர் ஆரம்ப சுகாதார நிலையம் 2009 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசரகால ஊர்தி 108 ஆனது நிறுத்துவது வழக்கம். இங்கிருந்து தான் அவசர கால ஊர்தி ஊமச்சிகுளம், சத்திரப்பட்டி, ஒத்தக்கடை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள 108 வாகனமே சென்று வருகிறது.
இவ்வாகனம் ஆனது செல்வது பல உயிர்களை காத்து உள்ளது. இந்த நிலையில் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 வாகனத்தை நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் அவர்கள் பயன்படுத்தி வந்த மருத்துவ உபகரணங்களை குப்பை போல் போட்டு வைத்துள்ளதாகவும், அறையை பூட்டி வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவசர அழைப்பு வந்ததால் வாகனத்தை எடுத்து கேஸ் முடிந்து திரும்பி புதூர் மருத்துவமனைக்கு வந்த பொழுது வாகனம் நிறுத்தும் இடத்தில் சேர்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், ஏன் என்று கேட்டதற்கு, இனி இங்கு வாகனத்தை நிறுத்தக்கூடாது என மருத்துவர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டார்கள். ஆதலால் வேறு எங்கேயாவது நிறுத்திக் கொள்ளுங்கள் என அங்குள்ள செவிலியர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அவசரகால ஊர்தி பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் சாலையில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாகனம் நிறுத்துவதற்கு ஒரு மருத்துவரை கார் நிறுத்துவதற்கு இந்த ஏற்பாடு என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி சுகாதார அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பாரா ? உயிர் காக்கும் 108 அவசர கால ஊர்தி வாகனம் நிறுத்துவதற்கு ஆரம்ப சுகாதார நேரத்தில் இடம் கிடைக்குமா ? ஏன் இந்த பாகுபாடு எனகேள்வி யை எழுப்பியுள்ளனர் 108 அவசர கால ஊழியர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள்.