
மதுரை புதூர் பேருந்து நிலையம் அமைந்துள்ள மூன்று மாடி கொண்ட தனியார் உணவு விடுதி மற்றும் தங்க விடுதி செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தரைத்தளத்தில் திடீரென தீ கொழுந்து விட்டு எறிய தொடங்கியது.
இந்த தீ முதல் தரம் வரை பரவியது. 20 அறைகளில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர். சம்பவ குறித்து தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் விரைவாக செயல்பட்டு தீ மேலும் தடுத்தனர்.
மேலும் முதல் தளத்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர் அதிக புகை மூட்டத்தால் ஏழு பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக 108 அவசர கால ஊர்தி மூலமாக அனைவரையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு சென்றனர்.
தீயணைப்பு துறையினர் மற்றும் 108 அவசரகால ஊர்களின் துரித செயல்பாட்டினால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அதிகாலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது புதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.