செய்திகள்மாநகராட்சி

புதிதாக நூலக கட்டிடத்திற்கு பூஜை செய்த சோழவந்தான் பேரூராட்சி | நகரின் மையப்பகுதியில் அமைக்க கோரிக்கை

Cholavanthan Peruradchi paid homage to the new library building | Request to set up in the city center

பல்லாண்டுகளாக சோழவந்தான் நகரின் மைய பகுதியில் பாழடைந்த வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நூலகத்திற்கு புதிய மாற்றுக் கட்டிடம் கட்ட முயற்சித்த சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகத்தின் செயல் பாராட்டுக்குரியது.

என்றபோதும், பொதுவாக நூலத்தின் முதன்மை நோக்கம் என்ன ? அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்தரும் வகையிலானதாக இருக்க வேண்டுமா.. இல்லை… ஒரு பகுதி மக்களுக்கு மட்டும் பயன் தந்தால் போதுமா ? என்ற கேள்வியை அப்பகுதி நூலக வாசிப்பாளர்கள் எழுப்பியுள்ளனர்.

தற்போது பேரூராட்சி நிர்வாகம், நகரின் 1 சதவீதம் மக்களுக்கு மட்டுமே பயன்படும் வகையில் RMS காலனி பகுதியில் பூமி பூஜை செய்துள்ளதாகவும், இது யோசிக்க வேண்டிய விஷயம் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், ஊருக்கு வெளியில் இருக்கும் இந்த நூலகத்தை.. பேட்டை பகுதி, வாடிப்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மக்கள் எப்படி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த நூலக கட்டுமானத்திற்கு அரசு சார்பில் ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வளவு செலவு செய்து புதிதாக கட்டக் கூடிய நூலகத்தை சோழவந்தான் பகுதியில் உள்ள அனைவரும் பயன்படும்படி பொதுவாக மைய இடத்தில் கட்டிக் கொடுத்தால் மட்டுமே அது பயன்படக் கூடியதாக இருக்கும்.

எனவே சிலர் ஆதாயத்திற்காக அல்லாமல் பொதுமக்களின் ஆதாயத்திற்காக நூலகத்தை அனைவரும் அணுகும் விதமான இடத்தில் அமைக்க வேண்டும் என்றும் பூமி பூஜை போட்ட இடத்தை அரசின் வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அப்பகுதி மகக்ள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு தக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சோழவந்தான் பேரூராட்சி பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: