செய்திகள்

பிரபல சினிமா பைனான்சியர் அன்புச் செழியனின் சென்னை, மதுரையில் வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை

The income tax department raided the houses and offices of famous cinema financier Anbuch Cheliyan in Madurai and Chennai

பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன். இவர் ஆண்டவன் கட்டளை, மருது, வெள்ளைக்கார துரை உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். அதோடு திரை துறையில் பெரிய பட்ஜெட் படங்களுக்கும் பைனான்சியராகவும் இருக்கிறார்.

இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சினிமா பைனான்சியர் அலுவலகம், வீடு என அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்/

அதே போன்று மதுரை காமராஜர் சாலையில் உள்ள அவரது சொந்த பங்களா, செல்லூர் கோபுரம் பிலிம்ஸ் அலுவலகம், கீரைத்துரை பகுதியில் உள்ள பூர்வீக வீடு உள்ளிட்ட அன்புச்செழியன் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரையை சேர்ந்த அன்புசெழியன் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த சூழலில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் வருமானத் துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு விஜய் நடித்த திகில் பட விவகாரம் தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் அன்பு செழியன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 10 க்கும் இடங்களில் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: