பாரா ஒலிம்பிக்போட்டியில் தங்கப்பதக்கம் | மதுரை மாநகராட்சி பள்ளி மாணவிக்கு மேயர் வாழ்த்து
Gold medal at the Paralympics | Mayor congratulates Madurai Corporation School student

பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்ற மாணவி ஜெ.ஜெர்லின் அனிகா அவர்களுக்கு மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் மருத்துவர். கா.ப.கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மதுரை மாநகராட்சி அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் வில்லாபுரம் பகுதியை சேர்ந்த செவித்திறன் மாற்றுத் திறனாளியான ஜெ.ஜெர்லின் அனிகா அவர்கள்.
தற்போது பிரேசிலில் நடைபெற்ற 24வது (ழுடலஅpiஉ னுநயக) பாரா ஒலிம்பிக் இறகு பந்து போட்டி ஒற்றையர் பிரிவில் 1 தங்கப்பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் 1 தங்க பதக்கமும் பெற்றுள்ளார்.
மேலும் இந்திய அணி பேட்மின்டன் குழு போட்டியிலும் வென்று 1 தங்கப்பதக்கம் பெற்றுள்ளது. தங்கப்பதக்கம் பெற்ற அம்மாணவிக்கு மேயர், ஆணையாளர் அவர்கள் மாநகராட்சியின் பள்ளி மாணவ, மாணவிகள் சார்பாக வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்தார்கள்.
ஜெ.ஜெர்லின் அனிகா அவர்கள் கடந்த 2018ல் மலேசியாவில் நடந்த ஆசியா பசிபிக் பேட்மின்டன் சாம்பின்ஷிப் போட்டியில் 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கமும், 2019 ஆம் ஆண்டு சீனா தைபேயில் சிறப்பு பிரிவினருக்கான 2வது உலக இறகுபந்தாட்டம் (பேட்மின்டன்) சாம்பியன்ஷிப் தொடர் போட்டியில் தங்கப் பதக்கமும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.