பெட்ஸ்வீடியோஜல்லிக்கட்டு

பாரம்பரிய மாடு வளர்க்கும் குடும்பம் வெள்ளியங்குன்றம் சீனி

Jallikattu | Velliyankundram | Madurai

#Jallikattu #Manjuvirattu #Velliyankundram

பயண அனுபவம்

வெள்ளியங்குன்றம் பகுதி அழகர்கோவில் செல்லும் வழியில் அப்பன்திருப்பதி அருகில் உள்ளது. அந்த காலத்தில் இங்கு வளர்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு மாடுகள் மிகவும் புகழ் பெற்றவை. அழகர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைமாடுகள் வளர்ப்போர் அதிகம் இருந்துள்ளனர். இன்றைக்கும் ஒரு சிலர் இப்பகுதியில் பாரம்பர்யமாக கிடை மாடு தொழில் செய்து வருகின்றனர்.

சரி, அதற்கு இந்த வீடியோவிற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விக்கு, பதிலாக, மாட்டுக் கூட்டம் என்று பெயர் பெற்ற நாட்டு மாடு வளர்க்கும் குடும்பத்தைச் சேர்ந்த வீடியோ பதிவுதான் இது. நான், வெள்ளியங்குன்றம் கோயில் மாட்டை எடுக்கத்தான் அங்கு சென்றேன்.

ஆனால், அன்றைக்கு கோயில்மாடு வளர்ப்பாளர்கள் வெளியூருக்குச் சென்ற காரணத்தால், மாட்டு கூட்டம் குடும்பத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ஏற்பாட்டை அன்பு தம்பி நந்தீஸ் செய்திருந்தார். அவருக்கு எனது நன்றிகள்.

வெள்ளியங்குன்றம் பேருந்து நிலையத்தில் காத்திருக்க, சிவா தம்பி அவர்கள் என்னை அழைத்துச் சென்றார். ஆலோ பிளாக் செங்கல் தயாரிக்கும் ஆலைக்கு. அங்கு ராமர் மாடு கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் சீனி அண்ணன் அவர்கள் வெள்ளை வேஷ்டியில், டிவிஎஸ் 50ல் அங்கு வந்தார். வாங்க தம்பி என்று புன்கையுடன் அறிமுகம் ஆகிக் கொண்டேன்.

அதன் பிறகு சில நிமிட உரையாடலுக்குப் பிறகு, மாட்டுக் கூட்டம் பரம்பரைப் பற்றி தெரிந்து கொண்டேன். அதன்பின்புதான் இந்த வீடியோவின் முக்கியத்தை உணர்ந்தேன். நிறைய விசயங்களை பகிர்ந்தார். அதை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். இதுபோன்றவர்களின் பதிவுகள் மிக முக்கியமாக கருதுகின்றேன்.

ஐல்லிக்கட்டு என்பது வீர விளையாட்டு என்பதை தாண்டி, அது அக்காலத்தில் எப்படி நடந்துள்ளது என்பதை உணர்தல் அவசியம். முக்கியமாக அன்றைக்கு மஞ்சுவிரட்டில் வெற்றி பெற்ற மாட்டிற்கு குத்தால துண்டை இரண்டா கிழிச்சு, கொடுப்பது வழக்கம் என்று கூறும், போது கமிட்டி எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பது தெளிவாக புரிகிறது.

இன்னும் மாட்டு கூட்டம் பரம்பைர குறித்து முழுமையாக வேறு ஒரு பேட்டியில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆவலுடன், பேட்டியை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினேன். முக்கியமாக பேட்டி முடியும் வரை அங்கிருந்த தம்பிகள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

அங்கிருந்து கிளம்பினாலும் அவர்கள் விடுவதாக இல்லை. தேனீர் கடையில் அருந்திவிட்டு, பயணச் செலவுக்கான தொகை அளித்து அன்புடன் வழி அனுப்பிவைத்தனர். அடுத்த பயணம் இங்கு உள்ளது. அது வெள்ளியங்குன்றம் கோயில் மாடு பற்றிதான். வாடியில் நின்று அனைவரையும் மிரட்டும் அந்த காளையை பார்க்கவே காத்திருக்கின்றேன். விரைவில் பதிவு செய்யப்படும். அதுவைர காத்திருங்கள் நன்றிகள்.

___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 📞 95 66 53 1237. ( Reporter – Whats app )
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

🔵 App Link: https://play.google.com/store/apps/de…

🔵Online Web Tv : https://hellomaduraitv.com/

🔵 Facebook :https://www.facebook.com/hellomaduraitv

🔵 Hello Madurai News website : https://hellomadurai.in/

🔵 Agri News website : https://tamilvivasayam.com/

🔵 Amma Samaiyal Food website : https://ammasamaiyal.com/

🔵 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: