மதுரைவரலாறு

பாகுபலியை மிஞ்சிய மதுரை கோட்டை

Madurai History

தனஞ்செய வணிகன் குலசேகர பாண்டியனிடம் கடம்பவனத்தில் இரவில் கண்ட காட்சியையும், அதேபோல் மன்னன் கனவில் தோன்றிய இறைவனின் ஆணைப் படியும் சுயம்புவாக தோன்றிய லிங்கம் இருக்கும் இடத்தில் ஒரு கோயிலைக் கட்டினான். கோயிலை சுற்றியிருந்த கடம்பவனத்தை அழித்து, நகரை உருவாக்கினான், மன்னன் குலசேகர பாண்டியன். ஆரம்பத்தில் மிகச் சிறியதாக மரங்கçeக் கொண்டு ஒரு கோயில் கட்டப்பட்டது. சில ஆண்டுகளில் அந்தக் கோயில் சிதிலமடைந்து. அதன்பின் மண் சுவரால் கோயில் கட்டப்பட்டது. அதுவும் சில ஆண்டுகள்தான் நிலைத்தது. அதன்பின் செங்கல் கொண்டு கோயில் கட்டப்பட்டது. அதுவும் கொஞ்ச நாளைக்குத்தான் கம்பீரமாக நின்றது.

அதன்பின் தான் கற்களைக் கொண்டு கட்டும் முறை உருவானது. இந்தக் கோயிலையும் அப்படியே கட்டினார்கள். அதன்பின்தான் கோயில் நிலைத்து நிற்கத் துவங்கியது. இப்படி சிறியதாக மரத்தால் கட்டப்பட்ட கோயில்தான் பின்னாளில் பிரமாண்டமான மீனாட்சியம்மன் கோயிலாக வளர்ந்தது. பாண்டியர்களுக்கு 14 என்ற எண்ணின் மீது அப்படியயன்ன மோகமோ தெரியவில்லை. அவர்கள் உருவாக்கிய தெருக்கள் எல்லாம் 14ன் பெருக்குத் தொகையாகவே இருந்தன. சிறிய வீதிகள், சந்துக்கள் போன்றவற்றை வெறும் 14 அடி அகலத்தில் அமைத்தார்கள்.

சிறிய தெருக்களை 28 அடி அகலத்திலும், பெரிய தெருக்களை 56 அடி அகலத்திலும் அமைத்தார்கள். சுவாமி சன்னதி போன்ற மிகப் பெரிய தெருக்களை 84 அடி அகலத்தில் அமைத்தார்கள். இவ்வளவு ஏன் சுவாமி சன்னதியில் உள்ள கர்ப்பகிரகம் 28 அடிக்கு 28 அடி என்ற சதுர அளவிலே கட்டப்பட்டிருக்கிறது. இதோடு பாண்டியர்களின் 14 மோகம் நின்றுவிடவில்லை. மதுரை நகரையே 14 டிகிரி சாய்ந்த கோணத்திலேயே உருவாக்கியிருக் கிறார்கள்.
நாம் இன்றைக்கும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலை மேப்பில் பார்த்தால் அது வடக்கு திசையில் கச்சிதமாக சரியாக கட்டப்பட்டிருக்காது. அது 14 டிகிரி கோணம் சாய்ந்து இருப்பது தெரியும்.

இந்த 14 டிகிரி சாய்ந்த கோணம் சுவாமி சன்னதியின் கர்ப்பகிரகத்தில் இருந்து தொடங்குகிறது. கர்ப்பகிரகத்தை அடிப்படையாக வைத்து கோயிலும், கோயிலை அடிப்படையாக வைத்து மதுரை நகரமும் அமைக்கப்பட்டதால் மொத்த நகரமும் 14 டிகிரி சாய்ந்த நிலையிலேயே உள்ளது. இந்த சாய்ந்த கோணம் தவறுதலாக கட்டப்பட்டதல்ல. வேண்டுமென்றேதான் இப்படி சாய்ந்த கோணத்தில் நகரை உருவாக்கியிருக் கிறார்கள் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

மதுரையின் காற்றோட்டத்தை அடிப்படையாக கொண்டே இப்படி நகரம் அமைக்கப்பட்டது. காற்றின் போக்குக்கு ஏற்ப கட்டடங்கள் அமைக்கப்படும்போது அது காற்றினால் ஏற்படும் சேதத்தில் இருந்து தப்பிவிடுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலும் வெகுநாட்கள் நிலைத்து நிற்க வேண்டும் என்பதாலும், தொடர்ந்து வீசிக்கொண்டே இருக்கும் காற்று கோயிலை சிதைத்துவிடக்கூடாது என்பதற்காகவும் இப்படி அமைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். மேலும் பாண்டியர்களுக்கு பகைவர்கள் வருகை என்பது வடக்கு திசையில் இருந்தே வந்தது.

அவர்களிடமிருந்து நகரை பாதுகாக்கவும் இப்படி சாய்ந்த கோணத்தில் நகரை அமைத்திருக்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். பழைய மதுரை நகரைச் சுற்றி கோட்டையும், அதனைச் சுற்றி அகழியும் அமைந்திருந்தது. 14 டிகிரி சாய்வு கோணத்தால் எதிரிகள் கோட்டையின் வடக்கு வாசலை அடைய முடியாது. அவர்கள் வைகை ஆற்றைக் கடந்ததும் வந்து சேரும் இடம் அகழியின் வடகிழக்கு மூலைதான். அங்கிருந்து அவர்கள் வடக்கு வாசல் வந்து சேருவதற்குள் பாண்டிய படைகள் அவர்கçe ஒரு வழி பண்ணிவிடும். இதற்கு வசதியாகத்தான் 14 டிகிரி சாய்ந்த கோணத்தில் மதுரை அமைக்கப்பட்டதாக தெரிவிக்கிறார்கள்.

மதுரை கோட்டைக்குள் எதிரிகள் நுழைவது சாதாரண காரியமில்லை. மதுரை கோட்டை எப்படியிருந்தது என்பதை கலித்தொகை, சிறுபாணாற்றுப்படை, அகநானூறு, புறநானூறு போன்ற இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனை வைத்தே ‘சங்ககால மதுரை’ எப்படியிருந்தது என்பதை அறிந்துகொள்ள முடியும். பாண்டிய மன்னர்கள் மக்களுக்கான மன்னர்கள் என்பதை அவர்களின் நகர அமைப்பே மீண்டும் மீண்டும் பறைசாற்றுகிறது. இந்த மன்னர்கள் அன்றைய சேரர்களின் தலைநகரம் போன்றோ சோழர்களின் தலைநகரம் போன்றோ பிரமாண்டமான கட்டடங்கள் எதையும் நகரில் அமைக்கவில்லை.

பாண்டியர்களின் அரண்மனை, கோயில்கள் என்று எல்லாமே எளிமையாக இருந்தன. மீனாட்சியம்மன் கோயிலும் அன்று சிறிய கோயில்தான். மக்களின் வசதிக்காகவே நகரம் நிர்ணயிக்கப்பட்டது. மதுரையின் கோட்டை எப்படியிருந்தது என்பதைப் பற்றி இலக்கியங்கள் விலாவாரியாக பேசுகின்றன. இந்த கோட்டையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் கொஞ்சம் ‘பாகுபலி’ படத்தில் வரும் போர்க்காட்சிகçe ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அதையயல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் தொழில்நுட்பங்கள் மதுரை கோட்டை சுவரில் இருந்தன.

மதுரை நகரைச் சுற்றி மிக உயரமான கோட்டைச் சுவர்கள் இருந்தன. அதை காவல்காக்க போர்வீரர்கள் யாரும் இருக்கவில்லை. அதேபோல் எதிரிகள் கோட்டையை சூழ்ந்து கொண்டாலும் அவர்கçe எதிர்த்து போரிட போர்வீரர்கள் இருக்கமாட்டார்கள். இன்றைக்கு நாம் பயன்படுத்தும் தானியங்கி தொழில்நுட்பத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாண்டியர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். கோட்டைச் சுவர்களின் மீது தானியங்கி பொறிகள் வைக்கப்பட்டிருந்தன. இவைகள் எதிரிகளை உள்ளே நுழையவிடாமல் எதிர்த்து யுத்தம் செய்யும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது. அதில் சில பொறிகள் தீயை வாரி எதிரிகள் மீது வீசும். மேலும் சில பொறிகள் மணலை எதிரிகள் மீது மழையாய்ப் பொழியும்.

மற்ற சில பொறிகள் எதிரிகள் மீது வாளைவீசி வெட்டித்தள்ளும். சில பொறிகள் கயிறுகளை வீசி எதிரிகçeக் கட்டிப்போடும். சில பொறிகள் வில்லை வçeத்து அம்புகçe இடைவிடாமல் தொடர்ந்து செலுத்திக்கொண்டே இருக்கும். சில பொறிகளில் இருந்து பாம்புகள் சாரை சாரையாக வெளிப்பட்டு எதிரிகளைக் கடித்துக்கொல்லும். பகைவர்கள் விடும் அம்பு, ஈட்டியை எட்டிப்பிடித்து அவற்றை மீண்டும் அவர்கள் மீதே ஏவிவிடும் பொறிகளும் அன்றைக்கே இருந்தன.

சில பொறிகள் எதிரிகள் மீது கொதிக்கும் நீரை பீச்சியடித்து நிலைகுலைய செய்யும். இதை எல்லாம் மீறி அகழியைக் கடந்து கோட்டைச் சுவரைப் பற்றுவோர் உச்சந் தலையை கொத்தி மூளையை தனியாக எடுக்கும் விதமாக பொறிகள் இருந்தன. இதற்கும் தப்பிப்பவர்களின் கழுத்தில் பதிந்து அவர்களின் கழுத்தை முறிக்கும் பொறியும் இருந்தது. இதையயல்லாம் மீறி மதுரைக்குள் நுழைவது ஒரு பகல் கனவாகவே பகைவர்களுக்கு இருந்தது. இப்படி சிறப்போடு ஆண்ட பாண்டிய மன்னர்கள் பின் எப்படி தோற்றுப்போனார்கள்.

எழுத்து – எஸ்.பி. செந்தில்குமார்

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
2

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: