
மதுரை பழங்காநத்தம் பகுதியில் டிவிஎஸ் நகர் செல்லும் சாலை பிரிவில் அமைக்கப்பட்டுள்ள, பிரம்மாண்ட பாலம் பதினைந்து ஆண்டுகளாய் பயன்படுத்தப் படாமலேயே உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
போக்குவரத்து நெருக்கடி மிகுந்த மாநகரம் மதுரை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் நகரின் போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பதற்காக எத்தனையோ திட்டங்கள் அமல் படுத்தி வருகின்றனர்.
அதில், ஒரு திட்டம்தான் மதுரை – பழங்காநத்தம் – டிவிஎஸ் நகர் சாலையில் திருப்பரங்குன்றம் சாலைக்கு குறுக்கே மிகப்பெரிய பாலம் அமைக்கும் திட்டம். இந்த பாலம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வந்தபாடில்லை.
மேலும் இந்த பாலம் கட்டி 15 ஆண்டுகள் கடந்தும், இன்றுவரை முறையாக பாலத்தில் விளக்குகள் அமைக்காமல் அவல நிலை தொடர்கிறது. இதனால் சில சமூக விரோதிகள் பாலத்தின் மேல் நின்று அந்த பக்கம் இரு சக்கர வாகனத்தில் செல்வர்களிடம் போன் மற்றும் பணத்தை பறித்து செல்கின்றனர்.
விளக்குகள் இல்லாததால் இன்று வரை கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்டோர் பாலத்தின் மேலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர். இதனை உடனே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிவிஎஸ் நகர் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.