
மதுரை பழங்காநத்தம் காளவாசல் பைபாஸ் சாலையில் போடி லயன் மேம்பாலத்தில் மற்றும் நேரு நகர் சந்திப்பில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது இதுகுறித்து மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி பேராசிரியர் டாக்டர் யுவராஜ் மற்றும் இன்ஜினியரிங் மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மாதவன், மதுரை மாநகர தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ் ராம், திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி நவநீதராமன் ஆகியோர் கொண்ட குழுவினர் மதுரை பைபாஸ் சாலை போடி லைன் மேம்பாலத்தில் விபத்துக்களை எவ்வாறு குறைப்பது ஏன் விபத்து நடக்கிறது.
இனி வரும் காலங்களில் விபத்து நடக்காமல் இருப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் மாற்றுப் பாதைகளில் வாகனங்களை எவ்வாறு இயக்கலாம், சாலையில் நீளம் மற்றும் அதன் அகலத்தை அளந்து பார்த்தனர். இது குறித்து வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து நல்ல ஒரு திட்டம் வகுத்து மாவட்ட நிர்வாகத்திடமும் மாநகர காவல் ஆணையாளர் மற்றும் போக்குவரத்து துணை ஆணையாளர் ஆகியோருடன் ஆலோசனை செய்து திட்டங்கள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என வேலம்மாள் பொறியியல் கல்லூரி பேராசிரியர் டாக்டர் யுவராஜ் தெரிவித்தார்.