செய்திகள்

பழங்காநத்தத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்

Madurai News

மதுரை மாவட்டம் பழங்காநத்தம், நாவலர் சோமசுந்தர் பாரதியார் மேல்நிலைப் பள்ளியில்மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு தமிழ் நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் பணிநியமன ஆணைகளை இன்று (20.02.2021) வழங்கி தெரிவிக்கையில்:-

மதுரை மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்புறப் பகுதிகளில் நாளது தேதி வரை 1,26,191 உறுப்பினர்களைக் கொண்டு 11,483 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் துவக்கப்பட்டுள்ளன. இதில் 2020-2021-ஆம் நிதியாண்டில் மட்டும் 1,704 மகளிர் சுய உதவிக் குழுக்கள் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கடந்த 9 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ரூ.1880.82 கோடி வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 2019-2020-ஆம் நிதயாண்டில் மட்டும் ரூ.489.70 கோடி வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது.

2020-2021-ஆம் நடப்பு நிதயாண்டில் ஏப்ரல் 2020-ல் இருந்து இன்று வரை 14,815 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.600.67 கோடிவங்கிக் கடன் இணைப்பாகவும், கோவிட்-19 சிறப்பு வங்கிக் கடனாக 7,786 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.107.08 கோடியும் மொத்தம் 22,601 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.707.75 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் இயக்குநர் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் எம்.பிரபாகரன், உதவிதிட்ட இயக்குநர் ஹேமலதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: