
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர் சுந்தரி. இவர் திருப்பரங்குன்றம் காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட முனியாண்டிபுரம், பாம்பன் நகர், திருப்பரங்குன்றம், விளாச்சேரி, பசுமலை பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று போதை பழக்கம் ஏற்படுத்தும் தீங்கினை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் காவல் ஆய்வாளர் சுந்தரி, மேலும் பள்ளி, கல்லூரிகளில் காவல் துறை சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதில் மாணவ மாணவிகள், அதிலும் குறிப்பாக பெண் மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை புகார் பெட்டியில் போடவும். அதனை வியாழன் தோறும் காவல் துறை சார்பில் சேகரிப்பட்டு புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் புகார் பெட்டியில் அவசர கால அழைப்பிற்கு காவல் ஆய்வாளரின் அலை பேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண் மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் ஆய்வாளர் சுந்தரி குறிப்பிடுகையில், மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உத்திரவின் பேரில் துணை ஆணையர் சீனிவாச பெருமாள், உதவி ஆணையர் ரவி ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் திருப்பரங்குன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாம்பன் நகர், பசுமலை, விளாச்சேரி, முனியாண்டிபுரம், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பள்ளி கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு போதை பொருள் விழிப்புணர்வு, மன அழுத்ததை போக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
மேலும் பள்ளி, கல்லூரிகளில் காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைத்து அதனை வாரம் வெள்ளிக்கிழமை தோறும் சென்று பெட்டியில் உள்ள மாணவ, மாணவிகளின் புகார் கடிதத்தின் பேரில் குறைகளை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.