மருத்துவம்வீட்டு வைத்தியம்

பல் வலிக்கு வீட்டு வைத்தியம்

ஒரு டம்ளர் இளஞ்சூடான நீரில் 3 கல்லுப்பு போட்டு கரைத்து வாய் கொப்பளிக்க வேண்டும். அதிகமாகக் கல்லுப்பை போட கூடாது. ¼ டீஸ்பூன் மேல் கல்லுப்பை போட கூடாது. ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கூட சேர்க்கலாம். காலை, மாலை, இரவு என வாய் கொப்பளித்தால் பல் வலி அடங்கும். தொண்டை வலி இருந்தாலும் குறையும்.

கோதுமை புல் ஜூஸில் குணமாக்கும் மூலப்பொருட்கள் உள்ளன. உடலுக்குள் சென்று வீக்கத்தைக் குறைக்கும். கிருமிகளை அழிக்கும். அதில் உள்ள பச்சையம் கிருமிகளை எதிர்த்துப் போராடும். கோதுமை புல் ஜூஸை மவுத் வாஷ் போல வாயில் வைத்துக் கொப்பளிக்க பல் வலி குறையும். ஒரு பூண்டு, 2 கிராம்பு இடித்து, தட்டி வைக்கவும். இதனுடன் இந்துப்பு அல்லது சாதாரண உப்பு கலந்து பல் வலி உள்ள இடத்தில் வைக்கவும்.

ஒரு கைப்பிடி புதினா இலைகளை 2 டம்ளர் வெந்நீரில் கொதிக்கவிட்டு, 20 நிமிடம் அப்படியே ஆறவிட்டு, அந்தத் தண்ணீரை மட்டும் குடிக்கவும். அந்த புதினா தண்ணீரை மவுத் வாஷ் போல வாயில் வைத்துக் கொப்பளிக்க வேண்டும். ஒரு டம்ளர் இளஞ்சூடான நீரில் கிராம்பு எண்ணெய் 2 சொட்டு விட்டு, வாய் கொப்பளித்தாலும் பல் வலி குறையும்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

five × two =

Related Articles

Close