ஆர்ப்பாட்டம்செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 22ல் ஆர்ப்பாட்டம் | மதுரை இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

Demonstration on 22nd August with emphasis on various demands Madurai Secondary Teachers Association Notification

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில், மாநில செயற்குழு கூட்டம் மதுரையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடம் அலுவலகத்தில் அதன், மாநிலத் தலைவர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்புரையாக மாநில பொதுச் செயலாளர் சங்கர், மற்றும் மாநில அனைத்து நிர்வாகிகள இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த செயற்குழு கூட்டத்தில், முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், அதன் மாநில பொதுச் செயலாளர் சங்கர் செய்தியாளர் கூறும் போது: அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, நகராட்சி, மாநகராட்சி உயர் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களும் தரம் உயர்த்தி அதில் பணியாற்றக்கூடிய இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர் பணி உயர்வு வழங்கப்பட வேண்டும்.

பள்ளி கல்வித்துறை அறிவித்தபடி, வருகின்ற 14 ,15 அன்று இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வு நேர்காணல் நடத்தப்பட வேண்டும், இது காலம் வரை வழங்கி வந்த ஒப்படைப்பு, அகவிலைப்படிய உடனே அரசு வழங்க முன்வர வேண்டும், தன் பங்களிப்பு, ஓய்வூதியம் ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

தமிழக அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் சலுகை போல அரசு உதவி பெறும் பள்ளிகளும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். மருத்துவ படிப்புக்கு அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கிய போல், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.

உயர்கல்வி பயில, அரசு பள்ளி மாணவர்களுக்கு இவ்வாறு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுப்பது போல ,அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று, இந்த செயற்குழு மூலம் தமிழக அரசை கேட்டுக்கொண்டது. மேற்கண்ட கோரிக்கையை நிறைவேறாத பட்சத்தில், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில், ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டமும், அதைத்தொடர்ந்து செப்டம்பர் 26 ஆம் பள்ளி கல்வித்துறை ஆணையர் அலுவலகம் முன்பு மாபெரும் தர்னாவும் போராட்டம் நடத்தப்படும் என்று, தமிழ்நாடு இளநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: