கல்விசெய்திகள்விருது | விழா | கூட்டம்

பரவை பார்வையற்றோர் பள்ளியில் 30 ஆண்டுக்கு முன்பு படித்தவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

A reunion program for those who studied at Paravai School for the Blind 30 years ago

மதுரை மாவட்டம், பரவை அருகே செயின்ட் பீட்டர் பார்வையற்றோர் பள்ளி உள்ளது. இந்தபள்ளியில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி துவக்கப்பட்டு இன்று 50 ஆம் ஆண்டு நிறைவு பெறுகிறது.
அதனையொட்டி, பள்ளியில் 30 ஆண்டுக்கு முன்பு பயின்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

காலை 9 மணிக்கு இறைவணக்கம் தமிழ் தாய் வாழ்த்து உடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து, ஓட்டப்பந்தயம், கயிறு தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், பலூன் உடைத்தல், உள்ளிட்ட 12 வகையான போட்டிகள் நடைபெற்றது.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அவர்களது, குடும்பத்தினருக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர், தங்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 50 ஆண்டு பொன்விழா காணும் ஆசிரியர்களுக்கு. சிறப்பு பாராட்டுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, நினைவு பரிசு வழங்கி குடும்பத்துடன்குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு “பிரெய்லி” பிரிண்டர் ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்கள். அதனை ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டனர்.

இது குறித்து, பள்ளியில் பயின்ற விஜயகுமார் கூறியதாவது: நான் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தேன். அப்போது எனக்கு சகோதரராக இருந்து ஆசிரியர்கள் நன்றாக பயிற்றுவித்தனர். எங்களுக்கு பள்ளி ஒரு தாய் வீடு ஆகும். இப்பள்ளியில் பயின்ற என்னைப் போன்ற சிலர் அரசு பணிகளிலும் வெளி மாநில பணிகளிலும் மற்றும் வெளிநாடுகளிலும் பணி புரிந்து வருகிறோம்.

நாங்கள் திருமண காலம் முடிந்து தற்போது குடும்பத்துடன் பங்கேற்று தங்கள் மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து வருகிறோம். எங்களுக்கு பயிற்றுவித்த பள்ளிக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகள் செய்ய காத்திருக்கிறோம் என்றார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: