
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உட்பட்ட பனையூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவற்காக ஊராட்சி மன்ற தலைவர் அகிலா ராணி கிளியன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுமணியில் ஈடுபட்டனர்.
வேலம்மாள் ரிங்ரோடு வாத்தியார் தோப்பு சர்வே எண் 23/7க்கு உட்பட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவர் அகற்றப்பட்டது. இதில் முதலில் அளவீடு செய்த நில அளவையர் கவிதா ஆய்வு செய்த அளவைவிட தற்போதுள்ள நில அளவையர் முத்துச்செல்வி குறைவான அளவில் நில மதிப்பிடு செய்து ஆக்கிரமிப்பு அகற்றினர்.
இதேபோல் சர்வே எண் 23/5 மற்றும் 23/6க்குட்பட்ட ரிங்ரோடு வேல்முருகன் நகர் பகுதியில் பனையூர் கண்மாய்க்கு சொந்தமான 39 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பட்டாணி ராமர் என்பவர் வீடு கட்டி விற்பனை செய்துள்ளார். இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.4 கோடி ஆகும்.
இந்த இடத்தில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது 39 சென்ட் ஆக்கிரமிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதுள்ள வீட்டின் உரிமையாளர்களிடம் பட்டாவை கொண்டு அளவீடு செய்ய கிராம நிர்வாக அலுவரை தொடர்கொள்ள கூறினர்.
ஏற்கனவே அளவீடு செய்த சர்வேயர் இல்லாமல் புதிதாக வேறொரு சர்வேரை கொண்டு அளவீடு செய்வதால் குளறுபடிகள் நடப்பதாக பனையூர் ஊராட்சி மன்ற தலைவி அகிலா ராணி கிளியன் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
அரசு நீர்பிடிப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது பாரபட்சம் இல்லாமல் செயல்படவும் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.