செய்திகள்மாநகராட்சி

பணி செய்ய விடாமல் தடுப்பதாக வாடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் புகார் விவகாரம் | விசாரணை போது வீடியோ கேம் விளையாடிய ஊராட்சி செயலாளர்

Vadipatti panchayat council chairman complains of obstruction of work | Panchayat secretary who played video game during interrogation

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி தன்னை வார்டு உறுப்பினர்களில் சிலர் பணி செய்ய விடாமல் தடுப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஊராட்சி மன்ற சாவி மற்றும் பேனாவை ஒப்படைத்து புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின்உதவி இயக்குனர் நேற்று முன்தினம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்து விசாரணை நடத்தி சென்றார்.

அதனைத் தொடர்ந்து இன்று மதியம் சம்பந்தப்பட்ட மேலக்கால் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நேரில் வந்து ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் நேரில் வரவழைத்து விசாரணை செய்தார்.

விசாரணை செய்து கொண்டிருக்கும்போதே வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் போலியாக பயனாளிகளை தயார் செய்து பணத்தை கையாடல் செய்ததாக மாறி மாறி குற்றம் சுமத்தினர்.

இறுதியில் ஊராட்சி ஒன்றியங்களின்உதவி இயக்குனர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி ஊராட்சி நிர்வாகம் முறையாக நடக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது அங்கிருந்த சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் கூறுகையில் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளில் மேலக்கால் ஊராட்சியில் மட்டும் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே உள்ளது இனி வரும் காலங்களில் ஊராட்சி நிர்வாகம் முறையாக நடக்க ஒத்துழைப்பு தரவேண்டும் இல்லையென்றால் சட்டப்படி புகாரை பெற்று சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் உருவாகும் என்று எச்சரித்து சென்றார்.

மேலும் ஊராட்சி ஒன்றியங்களின்உதவி இயக்குனர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் சோழவந்தான் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் ஊராட்சி மன்ற அலுவலத்தில் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தின் பிரச்சினைகளுக்கு காரணமான முன்னாள் ஊராட்சி செயலாளர் ஒய்யனன் அலுவலக வாசலில் செல்போனில் வீடியோகேம் விளையாடிக் கொண்டிருந்தது அங்கிருந்த பொதுமக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கடந்த 25.வருடங்களாக மேலக்கால் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வரும் ஒய்யனன் கடந்த சில தினங்களாக ஊராட்சி மன்றத்தில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருந்து வந்துள்ளார் என்றும் அவரால் தான் ஊராட்சி மன்ற நிர்வாகம் சீரழிந்து உள்ளது என்றும் அங்கிருந்த பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாட்டினர்.

ஆகையால் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் மீது விசாரணை செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கிருந்த பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: