ஆன்மீகம்இந்துவீடியோ

பஞ்சமுக ஆஞ்சநேயர் அவதாரம் எதற்கு ?

பஞ்சமுக ஆஞ்சநேயர்

நமக்கு அஞ்சநேயரை தெரியும். பஞ்சமுக அஞ்சநேயரை சில கோவில்களில் பார்த்தீருப்போம் .அவரைப் பற்றி என் பதிவில் போடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏன்? என்றால் எனக்கு அஞ்சநேயரை மிகவும் பிடிக்கும் .அதுவும் ஐந்து முகம் கொண்ட அஞ்சநேயரை தரிசிக்க இரு கண்கள் போதாது.

அஞ்சநேயர் பலம் நிறைந்தவர்.  நம்மால் ஆகாத மிகப் பெரிய காரியத்தையும் நொடி பொழுதில் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர். பஞ்சமுக ஆஞ்சநேயரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருப்பீர்கள்? . வாங்க ! அவரைப் பற்றி பார்ப்போம்.

ராமாயணத்தில், இராவணன் ராமனுடன் போர் புரிந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த யுத்தம் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருந்தது. ஒரு முறை ராமருக்கும் ,ராவணனுக்கும் நடந்த போரில் ராவணன் நிராயுதபாணியானான்.

கருணைக்கடலான ராமன் ராவணனை கொல்ல மனமின்றி ,”இன்று போய் நாளை வா “என திருப்பி அனுப்பி விட்டார் .இதன் மூலம், ராவணன் திருந்த ராமர் ஒரு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் , அரக்கக் குணம் படைத்த ராவணன் ராமன் அளித்த மன்னிப்பு , தான் திருந்துவதற்குத்தான் என உணராமல் மீண்டும் ராமருடன் போர் புரியவே நினைத்தான்.

மயில் ராவணன் என்ற மற்றொரு அசுரனது துணையுடன் போருக்கு கிளம்பினான். ராமனை அழிக்க மயில் ராவணன் கொடிய யாகத்தை நடத்த திட்டமிட்டான்.இந்த யாகம் நடந்தால் ராம லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என உணர்ந்த விபீஷணன், யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை அனுப்புமாறு ராமரிடம் கூறினான்.

ராமர் கூறியதன் பேரில், ஆஞ்சநேயர் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன் ஆகியவர்களை வணங்கி ஆசி பெற்றார். இந்த தெய்வங்கள் எல்லாம் போரில் அனுமன் வெற்றி பெற ,தங்களின் உருவ வடிவின் சக்தியை அனுமனுக்கு அளித்தனர் .

 

முழுமையாக தெரிந்து கொள்ள மேலே உள்ள வீடியோவை காணுங்கள்… கேளுங்கள்…

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

15 + twelve =

Related Articles

Close