
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலை விபூதி விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பசுமலை ஜிஎஸ்டி சாலையில் அருள்மிகு விபூதி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று காலையில் வழக்கம்போல் கோயில் பூசாரி கோவிலை திறக்க வந்தபோது அங்கு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக கோயில் நிர்வாகிகள்ன மற்றும் திருப்பரங்குன்றம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உண்டியலில் உள்ள கைரேகை சேகரித்தனர்.
கோயில் உண்டியலில் சுமார் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் இருக்கலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே இரண்டு முறை இந்த கோவிலில் உண்டியல் இதுபோன்ற திருட்டு நடைபெற்ற நிலையில், தற்போது மூன்றாவது முறையாக திருட்டு நடைபெற்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.