
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பசுமலையில் உள்ள திருப்பரங்குன்றம் MLA ராஜன் செல்லப்பாவின் சட்டமன்ற நிகழ்வு நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது.
விழாவில் சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் நூலை வெளியிட, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் பெற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் எதிர்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறுகையில், நீட் தேர்வு ரத்து மசோதா சட்டமன்றத்தில் நிறைவேறி 150 நாட்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த மசோதா குறித்து பேச யாரும் தயாராக இல்லை. நீட் தேர்வு மட்டுமல்ல எந்தவித வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாத அரசாக உள்ளது. மின்சாரம், சொத்துவரி உயர்வு போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து ஆர்பாட்டங்கள் நடத்தினோம்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா கூறுகையில், கழக அமைப்பு செயலளராக பெறுப்பேற்றுள்ளேன்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, எதிர்கட்சி துணைத்தலைவர் சகோதரர் உதயகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குமரி முதல் சென்னை வரை அதிமுக தொண்டர்கள் எடப்பாடி தலைமையில் செயல்பட தயாராக உள்ளோம .அனைத்து பகுதி தொண்டர்களின் ஆதரவோடு தென்மாவட்டங்களில் கூட்டங்கள் நடைபெற ஆலோசனை செய்து வருகிறோம் என்றார்.