ஆன்மீகம்இந்துவீடியோ

பக்திக்கு பரிசாக ஈசனின் உடலில் கொப்புளங்கள்

Temple

காவிரியாற்றங்கரையில் உள்ள திருச்சாத்தமங்கை என்னும் ஊர் சிவனருள் பெற்ற புண்ணியபூமி. படைப்புத் தொழில் செய்யும் நான்முகன், சிவபெருமானைப் தொழுது அருள்பெற்ற தலம். இங்குள்ள கோயிலில் மலர்க்கண்ணியம்மை உடனாய அவயந்திநாதர் என்ற பெயரில் சிவபெருமான் குடிகொண்டிருக்கிறார்.

இங்கு சிவத்தொண்டு செய்யும் குடும்பத்தில் பிறந்தார் திருநீலநக்கர். எப்போதும் சிவனையே சிந்திப்பவராய் வாழ்ந்து வந்த இவர் ஒரு மார்கழித் திருவாதிரை நாளில் சிவதரிசனத்திற்காக தன் மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

நீல நக்கருக்கு உதவியாக அவருடைய மனைவி தொழுகைக்கான பூக்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அயவந்திநாதர் சிலையில் விடம் கொண்ட சிலந்திப்பூச்சி ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதைக் கண்ட அம்மையாரின் மனம் துடித்தது. செய்வதறியாமல் தன் வாயினால் ஊதி லிங்கத்தின் மீது சென்ற பூச்சியை கீழே விழச் செய்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவரது எச்சில் துளிகள் ஈசனின் சிலையில் பட்டுவிட்டது.

இதைப் பார்த்த திருநீலநக்கருக்கு கோபம் அதிகமாகி விட்டது. சிவஅபசாரம் செய்த தன் மனைவியை நோக்கி வெகுண்டு எழுந்தார். “அறிவில்லாதவளே! அபசாரம் செய்துவிட்டாய். எம்பெருமானின் மேனியை எச்சில்படுத்திவிட்டாயே!” என்று அடிக்க கையை ஓங்கினார்.

முழுமையாக தெரிந்து கொள்ள மேலே உள்ள வீடியோவை காணுங்கள்… கேளுங்கள்…

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

19 − 11 =

Related Articles

Close