நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் குண்டு எறிதலில் தங்கம் வென்ற மதுரை மாணவன்
Madurai student won gold in shot put in international competition held in Nepal

பெருங்குடியை சேர்ந்தவர் பார்த்தசாரதி, லீலாவதி தம்பதியின் 2 வது மகன் ரிக்காஷ் சாரதி (வயது 17). தற்போது 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 5ம் தேதி நேபாளத்தில் நடைப்பெற்ற சர்வதேச 17 வயதிற்குட்பட்டோக்கான தடகள போட்டியில் குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்றார்.
தங்கம் வென்ற ரிக்காஷ் சாரதிக்கு பெருங்குடி அமுதம் பள்ளியில் மாணவர்கள் வரவேற்பளித்தனர். மாணவன் ரிக்காஷ் சாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த 5ம் தேதி நேபாளத்தில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான தடகள போட்டியில் குண்டு எறிதல் பிரிவில் தங்கம் வென்றேன்.
எனக்கு பயிற்ச்சியில் தொடர்ந்து ஊக்கம் உற்சாகம் தந்து உதவிய அமுதம் பள்ளி நிர்வாகம் விளையாட்டு ஆசிரியர், எனது பெற்றேருக்கும் நன்றி. தொடர்ந்து அரசு எனக்கு பயிற்ச்சி உதவிகள் வழங்கினால் ஆசிய, மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைப்பேன் என கூறினார்.