செய்திகள்விளையாட்டு

நேபால் நாட்டில் நடைபெற்ற சர்வதேச தேச போட்டிகளில் 19 தங்கம் மற்றும் 5 வெள்ளி பதக்கங்களை குவித்த விளையாட்டு வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

A warm welcome was given to the athletes who collected 19 gold and 5 silver medals in the international national competitions held in Nepal

நேபால் நாட்டில் நடைபெற்ற இந்தோ – நேபால் சர்வதேச அளவிலான போட்டிகள் கடந்த ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை நடைபெற்றது. இதில் மதுரையில் இருந்து 21 மாணவிகள் மற்றும் 3 மாணவர்கள் என பளுத்துக்குதல், சிலம்பம், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், என பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.

இதில் 16 மாணவிகள் தங்க பதக்கமும், 3 மாணவர்கள் தங்க பதக்கமும், 5 மாணவிகள் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர்.

மதுரை தனியார் கல்லூரியை சேர்ந்த சினேகா, சிவசக்தியா, ஹரிணி மற்றும் பூஜா ஆகிய மாணவிகள் பளுத்துக்கு போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளனர். தொடர்ந்து தனியார் பள்ளியை சேர்ந்த மாணவிகள் அர்ச்சனா, சிவரஞ்சனி, ஐஸ்வரியா, ஜனனி யோகராஜ் பளுத்துக்கு போட்டியில் தங்கமும், லோஹிதா வெள்ளியும் வென்றுள்னர்.

மேலும் தடகள போட்டிகளில் பங்கேற்ற அக்ஷயா, அட்ச்சயா, லத்திகா சாரா, பிரதிக்ஷா, மோனாஜா, ஆர்த்தி குவர் தங்கமும் சிவ வர்ஷினி, சுறக்ஷா பாய் ஆகியோர் வெள்ளியும் வென்றுள்ளனர். சிலம்பம் போட்டியில் ஸ்வேதா ஶ்ரீ ,கல்லூரி மாணவன் வசந்த் கிஷோர், யோகபிரகதீஸ் தங்கம் வென்றுள்ளார்.

தொடர்ந்து வெற்றி பெற்று மதுரை ரயில் நிலையத்திற்கு வந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: