
மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலை போடி லைன் மேம்பாலத்தில் முன்னாள் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் போஸ் அவரது மகன் சங்கர், பார்ச்சூனர் காரை டிவிஎஸ் நகரில் இருந்து காளவாசல் பைபாஸ் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது போடி லைன் மேம்பாலம் வந்து கொண்டிருக்கும் பொழுது இறக்கத்தில் பின்புற டயர் திடீரென கலன்று தனியாக வெளியே வந்தது. சுதாரித்துக் கொண்ட சங்கர், உடனடியாக காரை நிறுத்திவிட்டார்.
மிதமான வேகத்தில் வந்ததால், கார் டயர் கலன்று வாகனத்திலேயே சிக்கிக் கொண்டவது. இந்நிலையில் உடனடியாக அருகே உள்ள டயர் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்குள்ள ஊழியர்கள் விரைந்து சென்று கழன்று இருந்த வில் டயரை மாட்டி கொடுத்தனர்.
இதனால் சுமார் 20 நிமிடம் பைபாஸ் சாலை மேம்பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார், போக்குவரத்தை சீர் செய்து, அவரிடம் விசாரித்த பொழுது, காலையில் மதுரை கல்லூரி அருகே உள்ள பெட்ரோல் பங்க் உடன் இணைந்துள்ள கடையில் சர்வீஸ் செய்ததாகவும், வீல் நட்டை சரியான முறையில் மாட்டாத காரணத்தால், வீல் கழண்டு தனியாக வந்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
மேலும், மிதமான வேகத்தில் வந்ததால் காரின் டயர் தனியாக கழன்று விழுந்தவுடன், சுதாரித்துக் கொண்டு பிரேக் அடித்ததால், எவ்வித காயம் இன்றி உயிர் தப்பினேன் என்று தெரிவித்தார். பாலம் இறக்கத்தில் காரின் டயர் தனியாக கலன்று சென்றதால், அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.