நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்காக இலவசமாக எடுத்துச் செல்ல மதுரை மாவட்ட ஆட்சியர் அனுமதி
Madurai Collector News

மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.10 நாள்.29.04.2022-ன் படி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்காக இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி மனுதாரரின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் வண்டல் மண் தூர்வாரி எடுத்துச் செல்லப்பட வேண்டிய கண்மாய், ஏரி, குளம் அமைந்துள்ள கிராமம் ஆகியவை அதே வருவாய் கிராமம் அல்லது அதற்கு அருகிலுள்ள வருவாய் கிராமத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும்.
விவசாய காரியத்திற்காக வண்டல் மண்ணை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபர் விவசாய நிலம் வைத்துள்ளார் அல்லது கிராம அடங்கல் பதிவேட்டின்படி குத்தகை பெற்று விவசாயம் செய்து வருகிறார் என்பதற்கும் அவருடைய நிலத்தின் வகைப்பாடு (நஞ்சை, புஞ்சை) குறித்தும் விவசாய நிலத்தின் விஸ்தீரணம் குறித்தும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று விண்ணப்பத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்க வேண்டும்.
இலவசமாக வழங்கப்படும் மண்ணின் அளவு
விவசாய பயன்பாடு மட்டும் |
|||
அ) | நஞ்சை நிலம் | – | இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது 25 டிராக்டர் லோடுகள் |
ஆ) | புஞ்சை நிலம் | – | இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடுகள் |
மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி பெற்ற பின்னரே வண்டல் மண் எடுக்கப்பட வேண்டும். இவ்வனுமதியானது 20 நாட்களுக்கு மிகாமல் வழங்கப்படும்.
விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் வண்டல் மண்ணை எடுத்துச் செல்வதற்கு தங்களது வாகனங்களை சம்மந்தப்பட்ட ஏரி, குளம், கண்மாய்களுக்கு கொண்டு வரப்படும் பட்சத்தில் தூர்வாரப்படும் வண்டல் மண் பொதுப்பணித்துறை பொறியாளர், ஊரக வளர்ச்சி துறை பொறியாளர் மூலம் வாகனத்தில் ஏற்றி விடப்படும்.
தூர்வாருதல் மற்றும் வாகனத்தில்வண்டல் மண்ணை ஏற்றுவதற்கான கட்டணமாக முதன்மை தலைமைப் பொறியாளர், நீர்ஆதாரத்துறை கடித எண்.S7(1)/27857/OT-VII/2017, நாள்.28.04.2017-ல் தெரிவித்துள்ளவாறு அல்லது மாற்றம் ஏதும் செய்யப்பட்ட தொகையை செயற்பொறியாளரின் பெயரில் காசோலையாக மனுதாரரால் அரசுக்கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.
கண்மாயில் படிந்துள்ள கனிமம் மண் ஃ வண்டல் மண் என்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக அங்கீகரிக்கப்பட்ட சோதனை சாலை ஃ ஆய்வகத்திலிருந்து மண்பரிசோதணை அறிக்கையை சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அல்லது ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மண்
வண்டல் மண் எடுத்துச் செல்ல மாவட்ட ஆட்சியரின் உத்தரவு ஆணை பெற்றவுடன் அதன்படி மனுதாரர் சம்மந்தப்பட்ட வட்டாட்சியருடன் ஒரு ஒப்பந்தப்பத்திரம் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். அதன் பின்னரே கண்மாயிலிருந்து வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.
மாதிரி விண்ணப்பப் படிவம்
பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, கண்மாய், குளங்களிலிருந்து விவசாய நிலங்களை மேம்படுத்துவதற்காக இலவசமாக வண்டல் மண் எடுத்துச் செல்ல தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள், 1959,
விதி 12 (2)-ன் கீழ் அனுமதி கோரும் விண்ணப்பம்.
1. | பயனாளியின் பெயர் | |
2. | பயனாளியின் முகவரி மற்றும் வருவாய் கிராமத்தின் பெயர் | |
3. | பயனாளியின் நிலம் அமைந்துள்ள வருவாய் கிராமத்தின் பெயர் | |
4. | ஆதார் எண். | |
5. | வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி கோரும் நீர் நிலை விரபம். கண்மாயின் பெயர் மற்றும் அமைவிட விபரம் | |
6. | வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி கோரப்படும் அளவு (கனமீட்டரில்) | |
7. | வண்டல் மண் விவசாய தேவைக்காக மட்டும் பயன்படுத்துவேன் என்பதற்கான சான்றுருதி ஆவணம் இணைக்கப்பட்டுள்ளதா? | ஆம் / இல்லை |
8. | கனிமம் எடுத்துச் செல்லவுள்ள வாகனத்தின் வகை மற்றும் பதிவு எண் | |
9. | கனிமம் எடுத்துச் செல்ல உத்தேசிக்கப்பட்டுள்ள புல எண். பரப்பு மற்றும் வருவாய் கிராமத்தின் பெயர். | |
10. | கனிமம் கொண்டு செல்லப்படும் புல எண்ணின் சிட்டா, அடங்கல் நகல் இணைக்கப்பட்டுள்ளதா? | ஆம் / இல்லை |
உறுதிமொழி
தரைமட்ட மேல்பகுதியிலிருந்து 1 மீட்டர் ஆழம் வரை மட்டுமே வரையறை செய்யப்பட்ட இடத்தில் மட்டுமே கனிமம் எடுப்பேன். கரைப்பகுதி அங்கீகரிக்கப்பட்ட பாதையாக இருந்தால் மட்டுமே பயன்படுத்துவேன்.
ஆற்றின் கரைப்பகுதிகளை சேதப்படுத்தி பாதை ஏற்படுத்த மாட்டேன். நீர்நிலைப் பகுதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்த மாட்டேன். கனிமத்தை குவித்து வைக்க மாட்டேன்.
விவசாய நில மேம்பாடு தவிர வேறு எந்த வியாபார நோக்கில் விற்பனை செய்யமாட்டேன் என உறுதி அளிக்கிறேன். மேற்படி உறுதிமொழியை மீறும் பட்சத்தில் அரசு எடுக்கும் சட்டப்படி நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன்.
பயனாளியின் கையொப்பம்
வண்டல் மண் எடுக்கப்பட வேண்டிய கண்மாய் மற்றும் குளங்களின் விபரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், துணை இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகம், துணை இயக்குநர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்), அனைத்து வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர், தெரிவித்துள்ளார்.