
தென் மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பயணம் செய்வதற்கு மதுரை விமான நிலையத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் வாகனத்தின் மீது பாஜகவினர் காலனி வீசியது தொடர்பாக பெரும் சர்ச்சை கிளம்பியது.
எனவே அது சம்பந்தமாக இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வரும் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் நேற்று சென்னையிலிருந்து மதுரை வந்த தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பாதுகாப்பளிப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மதுரை விமான நிலைய வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1