அரசியல்செய்திகள்

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

One more person arrested in case of throwing shoe on Finance Minister PDR's car

கடந்த 13ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் இறந்த ராணுவ வீரருக்கு மதுரை விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பாக அஞ்சலி செலுத்தி தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செல்லும் போது அவர் மீது பாஜகவை சேர்ந்த பெண் ஒருவர் காலணி வீசியதும் மற்றவர்கள் அவரது காரை தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 31 பேர் மீது அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 10 பேரை கைது செய்தனர் மேலும் 21 பேரை தேடி வந்தனர்.

இந்நிலையில் மதுரை எச் எம் எஸ் காலனியை சேர்ந்த வினோத் குமார்(24) என்பவரை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர். மேலும் இவ் வழக்கில் தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: