செய்திகள்

நாளை மதுரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை; கலெக்டர் அறிவிப்பு

Madurai Vote counting

மதுரை மாவட்டம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதைத் தொடர்ந்து
22.02.2022 அன்று நடைபெறவிருக்கும் வாக்கு எண்ணும் மையமான மதுரை வக்பு வாரிய கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், கள் இன்று (20.02.2022) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:-

மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மொத்தம் 100 வார்டுகளில் நடைபெற்றது. இந்த 100 வார்டுகளையும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அந்தந்த மண்டலத்திற்கு உட்பட்ட இடங்களில் அமைந்துள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி (ஆண்கள்), தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி (பெண்கள்), பாத்திமா கல்லூரி மற்றும் வக்பு வாரிய கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் வருகின்ற 22.02.2022-அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு முறை காவல்துறையினர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பு அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகள் வரை கண்காணிக்கும்படி பொருத்தப்பட்டு அவற்றை வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் செய்தியாளர்கள் பார்வையிடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகிய பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், வருகின்ற 22.02.2022-அன்று நடைபெறவிருக்கும் வாக்கு எண்ணிக்கை எந்தவிதமான சட்ட ஒழுங்கு பிரச்சனையும் இல்லாமல் நடைபெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேர்மையான முறையில், சரியான முறையில், வெளிப்படையான முறையில் நடைபெறும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: