நாளை குடிமைப் பணி மற்றும் அதன் தேர்வு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் | மதுரை கலெக்டர் தகவல்
Awareness seminar on civil service and its selection tomorrow | Madurai Collector Information

மாவட்ட நிர்வாகம் மற்றும் READY தொண்டு நிறுவனம், அதன் தொழில்நுட்ப அறிவுரையாளராகிய கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்.அகாடமி இணைந்து மே மாதம் 17-ஆம் தேதி செவ்வாய் கிழமையன்று வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகத்தில் குடிமைப் பணி மற்றும் தேர்வுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இதன் தொடர்பான அனைத்து சந்தேகங்கள் பற்றிய கேள்விகளுக்கு விடை காணவும் ”உனக்குள் ஓர் ஐ.ஏ.எஸ்” எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கில் முன்னாள் UPSC தலைவர் திரு.டி.பி.அகர்வால் அவர்கள் சிறப்பு விருந்திரனராக கலந்து கொண்டு குடிமைப் பணிதேர்வுகள் குறித்து சிறப்புரையாற்றுகிறார். ஆகவே, குடிமைப் பணி தேர்வை எதிர்கொள்ளும் அனைத்துத் தரப்பினர் மற்றும் அனைத்து கல்லூரி மாணவ, மாணவிர்களும் 99449 76067-என்ற கைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து இக்கருத்தரங்கில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சிaர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தெரிவித்துள்ளார்.