
நாகமலை புதுக்கோட்டையில் கல்லூரி பேராசிரியரின் வீட்டை உடைத்து நகை பணத்தை கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகமலை புதுக்கோட்டை அகத்தியர் நகரை சேர்ந்தவர் அர்ஜுனன் 58. இவர் உசிலம்பட்டி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் மாமனார் வீட்டிற்கு சென்றிருந்தார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் முன் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம சாமி வீட்டில் இருந்த ஒரு பவுன் தங்க நகை பணம் ரூபாய் 40 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டார்.
இந்த சம்பவம் குறித்து அர்ஜுனன் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1