செய்திகள்போலீஸ் | தீயணைப்புத்துறை

நாகமலை புதுக்கோட்டையில் செயல்படாத கல்குவாரியில் மூழ்கி 13 வயது சிறுவன் உள்பட இருவர் உயிரிழப்பு

Two persons, including a 13-year-old boy, died after drowning in a disused quarry in Pudukottai, Nagamalai.

மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டை பில்லர் சாலையில் உள்ள செயல்பாடாத கல்குவாரிக்கு செக்கனூரனியைச் சேர்ந்த கிஷோர் (வயது 32), நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்த 13 வயது சிறுவன் சிவராமன் ஆகிய இருவரும் இன்று காலை குளிக்க சென்றுள்ளனர்.

13 வயது சிறுவன் சிவராமன் பள்ளத்தில் மூழ்கிய நிலையில் அவரை காப்பற்ற சென்ற கிஷோரும் நீரில் மூழ்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் மதுரை டவுன் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அங்கு வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இருவரையும் சடலமாக மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள நாகமலைபுதுக்கோட்டை காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோல் செயல்படாத கல்குவாரிகளில் சிறுவர்கள் குழிப்பதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர்களும் கவனமாக இருக்க வேண்டும்.

இனி வரும் காலங்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், இதுபோன்ற நீர் நிலைகளில் குளிக்கச் செல்வது ஆபத்தான விளைவை ஏற்படுத்தும். இதுபோல் பல சிறுவர்கள் பரிதாபமாக இறந்துள்ளனர். எனவே, இனியும் இதுபோல் நடக்காத வகையில், இதுபோல் செயலற்று கிடக்கும் கல்குவாரிகளில் தேங்கியிருக்கும் நீரில் சிறுவர்கள் குளிக்க அனுமதிக்காது பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Share Now
Back to top button
error: