நாகமலைபுதுக்கோட்டையைச் சேர்ந்த 3 வயது சிறுமி இந்திய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை
A 3-year-old girl from Nagamalaiputhukkottai is a world record holder in the Indian Book of Records

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த காந்த மூர்த்தி- கார்த்திகா தேவி தம்பதியினரின் 3வயது குழந்தையான தீமகி. இவரது பெற்றோர் சிறு வயதில் இருந்தே பல்வேறு விளையாட்டு மற்றும் பயிற்சிகளை தீமகிக்கு வருகின்றனர்.
அதீத ஞாபகத்திறன் கொண்ட தீமகி படங்களை பார்த்து தவறு இல்லாமல் அதன் பெயரை சரியாக கூறுவதில் வல்லவர். இந்த நிலையில் சிறுமி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மூலம் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
25 ஆங்கில பாடல்கள், 18 தமிழ்ப்பாடல்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைநகரம், 42 வகையான உணவுப் பொருட்கள், ராமாயணத்தில் வரும் 19 தாவரங்கள், 10 ராமாயண கதாபாத்திரங்கள், 14 வகையான மரங்கள் , 25 உலக தலைவர்கள் ஆகியவற்றை சரியாக சொல்லி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
3 வயதில் உலக சாதனையை செய்துள்ள குழந்தை தீமகிக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.