செய்திகள்

நவீன பென் (PEN) சிகிச்சை மூலம் இளைஞரின் உயிரைக் காப்பாற்றி அப்போலோ மருத்துவமனை சாதனை

Apollo Hospital Saves Youth's Life With Modern Pen (PEN) Treatment

தீவிர கணைய பாதிப்புடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளைஞரை பெர்குடானியஸ் எண்டோஸ்கோபிக் நெக்ரோசெக்டோமி (Percutaneous Endoscopic Necroscetomy – PEN) வழிமுறையைப் பயன்படுத்தி 42வயது இளைஞருக்கு சிறப்பான சிகிச்சை மூலம் அப்போலோ மருத்துவர் SNK செந்தூரன் குணப்படுத்தி சாதனை செய்துள்ளனர்.

சென்னையைத் தவிர்த்து தமிழகத்தில் PEN வழிமுறையைக் கையாண்டு நோயாளியின் உயிரைக் காப்பாற்றியது இதுவே முதல்முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்டோஸ்கோபிக் நிபுணர் SNK செந்தூரன் அவர்கள் நோயாளிக்கு PEN வழிமுறையில் சிகிச்சை அளித்தார். இந்த சிகிச்சை முறையை சைனுஸ் டிராக்ட் எண்டோஸ்கோமி என்றும் அழைக்கிறார்கள். உகந்த மயக்க மருந்து செலுத்தப்பட்டு, எண்டோஸ்கோப் வழிமுறை மூலம் இரண்டு, மூன்று முறை PEN சிகிச்சை அளிக்கப்பட்டதில் நோயாளி விரைவாகக் குணமடைந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட கணைய நோயாளி நவீன PEN சிகிச்சை முறையில் குணமடையச் செய்தது மருத்துவர்களுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்போலோ மருத்துவர்களின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது முதன்மை இயக்க அலுவலர் நீலக்கண்ணன் அப்போலோ மருத்துவமனை நிறுவனர் மரு. பிரதாப் சி ரெட்டி அவர்களின் மருத்துவத் துறையின் தொலைநோக்கு சிந்தனையின் பெயரில் அப்போலோ மருத்துவமனையில் உலக தரமான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், சிறந்த மருத்துவர்கள் மற்றும் மிகச் சிறந்தகருவிகள் கொண்டுள்ளது.

திருச்சி அப்போலோ மருத்துவமனை மேலும் 200 படுக்கையறை கொண்ட இந்த மருத்துவமனையை 300 படுக்கையறை கொண்டதாக அதிவிரைவில் மாற்ற உள்ளதாகவும் மிகச்சிறந்த தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவமனையை தற்போது உள்ள மருத்துவமனைக்கு பின்புறம்விரைவில் வரவிருப்பதாகவும் கூறினார்.

மூத்த பொது மேலாளர் சாமுவேல் இதுபோன்ற சிக்கலான அறுவை சிகிச்சை மற்றும் சவாலான நோய்களைக்கையாளுவதற்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தமருத்துவர்கள் குழு இங்கு உள்ளது என்றார். மேலும் தமிழகத்தில், சென்னை தவிர்த்து முதன்முறையாக திருச்சியில் PEN சிகிச்சையைமேற்கொண்ட மருத்துவர் SNK செந்தூரன், மருத்துவர் முரளிரெங்கன் மற்றும் மருத்துவர்கள் குழுவைப் பாராட்டினார்.

இதுபோன்ற புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு தேவையானஅனைத்துவித நவீன கருவிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இந்த மருத்துவமனையில் உள்ளது எனவும் தெரிவித்தார். மருத்துவமனை நிலைய மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் சிவம் மற்றும் துணை பொது மேலாளர் சங்கீத் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
25
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: