
ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 7ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நண்பர்கள் தினத்தை போற்றும் விதமாக, மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வித்தியாசமான முறையில் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
அதன்படி, மதுரை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையிலான போக்குவரத்து காவலர்கள் மதுரை கீழவாசல் மற்றும் பெரியார் நோக்கி சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி பொதுமக்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள் கூறியும் தேசிய கொடிகளை வழங்கியும் இனிப்புகள் வழங்கியும் நண்பர்கள் தினத்தை கொண்டாடினர்.
காவல்துறை உங்கள் நண்பன், சாலை விதிமுறைகளை மதிப்போம், தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஓட்டுங்கள் உள்ளிட்ட அறிவுரைகளை போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி வாகன ஓட்டிகளுக்கு கூறினார்.
தொடர்ந்து தேசியக்கொடிகளை வழங்கி நண்பர்கள் தினத்தன வாழ்க்கை வித்தியாசமான முறையில் வாகன ஓட்டிகளுக்கு தெரிவித்தார்.
போக்குவரத்து காவல்துறையின் இந்த செயல் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.