சினிமாவீடியோ

நடிகை மீனாவின் கணவர் புறா எச்சத்தால் இறந்தாரா

Actor Meena Husband death | Vidyasagar | Tamil Cinema Tv

#actor #Actormeena #meena #vidyasagar

பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவால் இறந்தாரா ? நுரையீரல் பாதிப்பால் இறந்தாரா ? இல்லை புறாவின் எச்சத்தால் இறந்தாரா ? எப்படி இறந்தார். அதபத்தி இந்த வீடியோவில் பாக்ஙகப்போறோம்.

மென்பொறியாளரான வித்யாசாகருக்கும், நடிகை மீனாவுக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவுங்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

இவர்கள் கோட்டூர்புரம் பகுதியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகை மீனாவின் கணவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் மட்டுமின்றி, இவரது தாயார், மகள் நைனிகா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது உண்மைதான்.

அதிலிருந்து மீண்டு வந்த நிலையில், ஏற்கனவே கொரோனாவுக்கு முன் கூட்டியே உடல்நலம் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட வித்யாசாகர் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில்தான், கடந்த 2 நாட்களுக்கு முன்னாடி ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், வித்யாசாகரின் நிலைமை கடுமையாக மோசமடைந்த காரணத்தால், உயர் சிகிச்சைகாக அமைந்தகரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தால், நேற்று இரவு, அதாவது 28ந் தேதி இரவு 9 மணியளவில் உயிரிழந்தார்.

48 வயதான வித்யாசாகரின் மறைவு தமிழ் சினிமா பிரபலங்களையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கூடேவ வித்யாசாகருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்ததாகவும், அவருக்கு புறாக்களின் எச்சம் பட்ட காற்றை சுவாசிப்பதால் நுரையீரலில் அலர்ஜி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் வித்யாசாகர் வீட்டின் அருகே அதிகளவு புறாக்கள் வளர்க்கப்பட்டிருந்ததாகவும் அப்போதிலிருந்தே அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு, இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நேரத்தில்தான் கொரோனாவும் சேர்ந்து அவரது நிலைமை மிகவும் மோசமாக்கியதாகியுள்ளது. இறுதியாக நுரையீரல் தானம் கிடைப்பதற்குள் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த மருத்துவர்கள் முயற்சித்த நிலையில்தான் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் மரணத்ைத தழுவியுள்ளார்.

வித்யாசாகரின் இறுதிச்சடங்கு கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்று, மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. கடைசியாக மாஸ்க் அணிந்தபடி மீனா தன் கணவரை உற்றுப் பார்த்து கண் கலங்கிய படி முத்தம் கொடுத்த காட்சி பார்க்கும் அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது.

சினிமா பிரபலங்கள் பலரும் ஒவ்வொருவராக நடிகை மீனாவை நேரடியாக சந்தித்து தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

மு,இரமேஷ் குமார்

மு.இரமேஷ்குமார். ஹலோ மதுரை மாத இதழின் நிறுவனர். நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: