
நகர் ஊரகமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண்.76, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (ந.வ (3))த்துறை, நாள்.14.06.2018-ல் வெளியிடப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் நிகழ்நிலை (Online)-ல் 14.06.2018 முதல் 13.09.2018 வரை மற்றும் 22.03.2021 முதல் 04.04.2021 வரை காலத்தில் விண்ணப்பித்தவர்கள் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களை அணுகி இசைவு பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், கல்வி நிறுவனங்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில் Online-ல் www.tn.gov.in/tcp-என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க 01.07.2022 முதல் கூடுதலாக 6 மாத காலத்திற்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவித்துள்ள ஆவணங்களை சமர்ப்பித்து இசைவு பெற்றுக் கொள்ளுமாறு மதுரை மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.