நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆணையாளர் ஆய்வு
Madurai Corporation Election News

மதுரை மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 வாக்குச் சாவடி மையங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆணையாளர் மரு.கா.ப.கார்த்தி கேயன் (15.02.2022) ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று 26.01.2022 அறிவிப்பு வெளியிடப்பட்டது. எதிர்வரும் 19.02.2022 அன்று வாக்கு பதிவு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது கோவிட் 19 பெருந்தொற்று தொடர்பான நிலையான வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளி மற்றும் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
அதன்படி மதுரை மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குகள் எண்ணுவதற்கு மண்டலம் 1 பகுதிகளுக்கு பாத்திமா கல்லூரி, மண்டலம் 2 பகுதிகளுக்கு வக்புவாரிய கல்லூரி, மண்டலம் 3 பகுதிகளுக்கு தமிழ்நாடு பாலிடெக்னிக் (மகளிர்) கல்லூரி, மண்டலம் 4 பகுதிகளுக்கு தமிழ்நாடு பாலிடெக்னிக் (ஆண்கள்) கல்லூரி ஆகிய வாக்கு எண்ணிக்கை மையங்களில் முன்னேற்பாட்டு பணிகளும் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தேர்தல் நடத்தும் அலுவலர் ஆணையாளர் அவர்கள் வாக்குச்சாவடி மையமான கரும்பாலை மற்றும் சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சாய்வு தளம், கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக மண்டலம் 1 தேர்தல் அலுவலகத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் எழுதுபொருட்கள், படிவங்கள் மற்றும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயார்படுத்தி வைக்கும் பணியினையும் பார்வையிட்டார்.
இந்த ஆய்வில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ரெங்கராஜன், ரவிச்சந்திரன், சுப்புத்தாய், மண்டல அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், வாக்குசாவடி அலுவலர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.