
மதுரை ஐராவத நல்லூர் பகுதியில் 2008ஆம் ஆண்டு அப்போதைய இருந்த அரசு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு தோட்டி மானியமாக ஒன்றரை ஏக்கர் நிலம் வழங்கப்பட்டன அந்த நிலத்தை 2009 ஆம் ஆண்டில் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் மோசடி செய்து அபகரிப்பு செய்துள்ளார்.
அரசு வழங்கப்பட்ட நிலத்தை சுமார் 30 ஆண்டுகள் கழித்துதான் யாருக்கும் விற்க முடியும் ஆனால் நிலம் வழங்கப்பட்ட ஒரு ஆண்டிலேயே ஆதிக்க சாதியை சேர்ந்தவர் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இது சட்டப்படி செல்லுபடியாகாது இது சம்பந்தமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளரும் 71வது வார்டு கவுன்சிலர் முனியாண்டி, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பனையூர் சேகர், திருப்பரங்குன்றம் ஒன்றியம் கிழக்கு தொகுதி செயலாளர் பாலா, வட்டச் செயலாளர் மூக்குசாமி மாவட்ட துணை அமைப்பாளர் வரிச்சியூர் பூமிநாதன் மற்றும் ஐராவதநல்லூர் ஆதிதிராவிட பொதுமக்கள் இன்று முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஆண்களும் பெண்களும் மதுரை தெப்பக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக தெரிவித்துள்ளனர்.