ஆன்மீகம்செய்திகள்வீடியோ

தொழிலில் கொடிகட்டி பறக்க பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலுக்கு வாங்க

Pillaiyarpatti Vinayagar Temple

ஹலோ மதுரை நேயர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். விநாயகர், ஆவணி மாதத்தில அமாவாசைக்குப் பிறகு வரும், சதுர்த்தி திதியில் பிறந்தார் என்பதால, இந்த நாளே ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுது. இன்னை விநாயகர் சதுர்த்தி என்பதால், முழு முதற் கடவுளான விநாயகர் பற்றி சுவாரஸ்யமான தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

பிள்ளையார் அப்டினா எல்லாருக்கும் ஞாபகம் வருவது பிள்ளையார்பட்டிதான். ஆத்தங்கைர ஓரத்துலையும், அரசமரத்துக்கு அடியிலையும் பிள்ளையார் இருந்தாலும், இந்த பிள்ளையார்பட்டியில இருக்கிற பிள்ளையார பார்க்க தினமும் கூட்டம் வந்துகிட்டேதான் இருக்கு. ஏன் எல்லாரும் பிள்ளையார்பட்டிக்கு வருசா வருசம் ஒரு முறை போய்ட்டு வர்றாங்க ? அப்டீங்குற விசயத்த தெரிஞ்சுக்கிட்டா ? கட்டாயம் நீங்களும் ஒரு முறை போய் வருவீங்க… சரி இனி விசயத்துக்கு வர்றேன்…

ஹோமமும், பால் அபிஷேகமும் குறிப்பிட்ட மாதசத்துக்கு ஒருமுறை இந்த கோவிலுக்கு வந்து செய்றவங்ளுக்கு அவுங்க தொழில் விருத்தியடைந்து, தொழிலில் அவுங்க ராஜாவாக கொடி கட்டி பறப்பாங்க…

தொழில் மட்டுமில்லாம, குடும்பத்துல எந்தவித பிரச்சனையும் இல்லாத கல்வியும், செல்வமும் நிறைவா கிடைக்கும் என்றும், ரொம்ப நானா திருமணம் ஆகாதவங்களுக்கும், பல ஆண்டுகளா குழந்தை இல்லாதவங்களுக்கும் இங்க வந்த சில வருசங்கள்ல அவுங்க வேண்டியது கிடச்சு, வாழ்க்கையில வசந்தம் வீசுமுன்னு இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடித்து சொல்லறாங்க.

இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த அருள்மிகு கற்பக விநாயகர் கோயில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூருல இருக்கு. அந்த ஊருக்கு பேரே பிள்ளையார் பட்டி கிராமம்தான். இந்த கிராமம் திருப்பத்தூரில இருந்து குன்றக்குடி செல்லும் வழியில 8 கிமீ தொலைவில் இருக்கு.

பக்தர்கள் மனம்போல் வேண்டுவதை தருவதால் இவருக்கு கற்பகவிநாயகர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அறிவு, ஒளி தரும் விநாயகராக இவர் இருக்கிறார். அதாவது இவர மனதாரத் தொழுதால் கல்வியும், ஞானமும் ஒருவருக்கு கிடைக்குனு சொல்றாங்க.

ஏற்கனவே சொன்னதுபோல, திருணமத் தடை, குழந்தையின்மை, தொழில் விருத்திக்கு இந்த கோவிலுக்கு வந்து, இங்குள்ள விநாயகரை வழிபட்டு, அதன்பிறகு வேலைய தொடங்குனா வெற்றி நிச்சயம் உண்டு. அதுக்கு ஆதாரமா, தமிழ் நாட்டுல இருக்குற பெரிய பெரிய பணக்கார தொழிலதிபர்கள் பலரும் இந்த கற்பக விநாயகர் கோவிலுக்கு வந்து வழிபட்டுச் சென்றவர்கள்தான் அப்டீங்குற விசயம் ஆச்சர்யமாக இருந்தாலும், அதுதான் உண்மை.

வரலாறு கல்வெட்டுபடி பார்த்தாக்கா இந்த கோவில் 1600 வருசங்கள் பழமையானது. இன்னைக்கு பிள்ளையார்பட்டினும் அழைக்கும் இந்த கோவில, புராண காலத்துல, எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், ராச நாராயணபுரம், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் அப்டீனு பல பெயர்கள் இந்த தலத்துக்கு இருக்கு.

( கோவிலோடு உள் பகுதி பாண்டிய மன்னர்களால் குடைவரைக் கோவிலாக உருவாக்கப்பட்டிருக்கு, அதே சமயத்துல வெளிப்புறம் நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் கட்டப்பட்டிருக்கு.

காரைக்குடி செட்டிநட்டார் கிபி 12ம் நூற்றாண்டில இருந்து, இந்த கோவில்ல செட்டிநாட்டு நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில தெய்வ திருப்பணிகள் நடத்தப்பட்டு வருவது கூடுதல் தகவல். )

மலையக் குடஞ்சு இந்த கோலிலுக்குள்ள இருக்குற கற்பக விநாயகர் சுமார் ஆறு அடி உயரத்தில பிரம்மாண்டமா பக்தர்களுக்கு காட்சி தருகிறார். தன்னோட வலது கையில் லிங்கம் ஏந்தியபடியும், வலம்புரியாக சுழித்த தும்பிக்கையுடன் இவர் வலம்புரி விநாயகர் என்றும் அழைக்கப்படுறார்.

இந்த கோவில்ல விபூதி அபிஷேகத்துல இருக்குற விநாயகரை தரிசிப்பது சிறப்புனு பக்தர்கள் பலரும் சொல்றாங்க. விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு முக்குறுணி மோதகம் அப்டீங்குற கொழுக்கட்டை இங்கு ரொம்ப ரொம்ப பிரசிக்த்தி பெற்றது.

தமிழ்நாட்டுல இருக்குற ரொம்ப ரொம்ப பழமையான குடைவரை கோயில்ல முக்கிய கோயிலா இருக்கு பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில். இந்த கோயில் சிவன் கோயிலாக இருந்தாலும் கற்பக விநாயகரால் மக்களிடையே பிரசித்தி பெற்று பிள்ளையார் கோயில் என்றே அழைக்கப்படுது. அது மட்டுமில்லாம பிள்ளையாரோட ஆறு படை வீடுல 5வது வீடா பிள்ளையார்பட்டி இருக்குது. உலகத்தில இருக்குற விநாயகர் சிற்பங்கள்ல முதன்மை சிற்பமாக இருக்காரு இந்த கற்பக விநாயகரு.

விநாயகரின் தும்பிக்கை வலப்புறமா வச்சிருக்கிறக்குறது ஒரு தனிச்சிறப்பு. அதுவும் வடக்கு திசை நோக்கி இருக்குற வலம்புரி விநாயகர் இந்த கோவில்ல மட்டும் தான் இருக்கு. இரண்டு கைகளோட காணப்படுற விநாயகர் சிலை உலகத்திலே ரெண்டு இடத்தில மட்டுமே இருக்கு, ஒன்னு பிள்ளையார்பட்டி, இன்னொன்னு ஆப்கானிஸ்தான்ல இருக்குதுன்னும் சொல்றாங்க.

கைல மோதகத்துக்கு பதிலா லிங்கத்தை வச்சு தியான கோலத்தில் காட்சி கொடுக்குறாரு. அது மட்டுமில்லாம வலது தந்தம் நீண்டும், இடது தந்தம் சுருங்கியும் இருக்குறது கூடுதல் சிறப்பு.

இந்த விநாயகர்சன்னதிய மலையைக் குடஞசி இருப்பாத, சன்னதியை வலம் வர இயலாது, அதற்கு பதிலா கமலையச் சுற்றி வலம் வர்றாங்க. இந்த கற்பக விநாயகர் சிற்பத்த வடிவமைச்ச சிற்பியோட எக்காட்டூர் கோன் பரணன் பெருந்தச்சன் என்ற அவரது பேர இந்த சிலைக்கி பக்கத்திலே செதுக்கிருக்காங்க.

முற்கால பாண்டியர்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்னதா இந்த கோவில கட்டியிருக்கிறதா வரலாறு சொல்றதாலா ? பல்லவர்களுக்கு முன்னரே குடைவரைக் கோயில அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு இருந்திருக்கு. கி.பி.1284ல இருந்து இந்த கோவில் நகரத்தார்களுக்கு உரிமை ஆயிருக்கு. அதற்கான சான்றும் இந்த கோவில்ல திருவீசர் சன்னத்தி பக்கத்தில இருக்கு. விநாயகருக்கு தேர்த்திருவிழா நடக்குற ஒருசில கோயில்ல பிள்ளையார்பட்டியும் ஒன்னு.

திருமணப் பேருக்கு கத்தாயினி, செல்வ வளத்துக்கு பசுபதீஸ்வரர் வழிபாடு, குழந்தைப்பேறு நாகலிங்கம் ஆகிய வழிபாடு இருக்கு. இந்தக் கோவில்ல நடக்கிற பெரிய திருவிழா விநாயகர் சதுர்த்தி திருவிழா தான்.

10 நாள் நடக்கும் இந்த திருவிழாவுக்கு தமிழகத்தில இருந்து பல்வேறு ஊர்களில் இருந்து வந்து பிள்ளையார தரிசிட்டுப் போறாங்க. அப்பறம், மாத சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை மாதம் “திருக்கார்த்திகை தீபத் திருவிழா”, மார்கழி மாத திருவாதிரை நாள்ல சிவகாமசுந்தரி நடராஜப் பெருமான் திருவீதி பவனி, தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட பிற பண்டிகை நாள்ல விசேச பூசை இங்கே நடக்குது.

கோயில் கிழக்கு வாசல்ல ராஜகோபுரம் ஏழு நிலைகளோட கம்பீரமாக காட்சி தருது. கோபுரத்திற்கு எதிரே வெளிப் பிரகாரத்தின் வட திசையில் அழகிய திருக்குளம் அமைஞ்சிருக்கு. இதெல்லாம் இந்த கோவிலோடு தனிச்சிறப்புக்கள்.

தொழில்ல ஓகோன்னு வரணும்? நீங்களும் ஒரு அம்பானியா ஆகணும் ? அப்டீனா ? பிள்ளையார்பட்டி விநாயகருக்கு ஒரு கணபதி ஹோமமும், பால் அபிஷேகமும் செய்தாலே போதும். திருமணத்தடையும், குழந்தை பாக்கியமும் இந்த கோவில்ல காலடி எடுத்து வச்சாலே கிடச்சுரும்.

கோவிலோட நடை காலை 6 மணி ல இருந்து, இரவு 9 மணி வரைக்கும் திறந்திருக்கும். தைப் பூச தினத்தில் மட்டும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைக்கும் திறந்திருக்கும்.

தினந்தோறும் ஐந்து கால பூசை நடக்கும் இந்த கோவிலுக்கு விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவது வழக்கம். கோவிலுக்கு அருகிலேயே தங்குவதற்கு வசதியான விடுதிகள் இருக்கு.

முக்கியமா ரொம்ப தூரத்துல இருந்து வர்றவங்க, பிள்ளையார்பட்டி விநாயகரை தரிசனம் செய்துகிட்டு, அருகில் இருக்க கூடிய காரைக்குடி அம்மன் கோவில், குன்றக்குடி முருகன் கோவில், வைரவன்பட்டி கோவில், திருப்பத்தூர் கோவில், சௌம்ய நாராயண பெருமாள் கோவில் னு ஒரு ரவுண்டு அடிக்கலாம்.

இவ்வளவும் சொன்ன பிறகு, வர யாருக்குத்தான் ஆச இருக்காது. நீங்க எங்க இருந்து கிளம்பினாலும், காரைக்குடி பேருந்து நிலையத்துக்கு வாங்க. அங்கிருந்து 13 கிமீ தூரத்துல இந்த கோவில் இருக்கு. அதேபோல சிவங்கயைில இருந்து 28 கி.மீ தொலைவில இந்த கோவில் இருக்கு. பைக்ல, கார்ல வர்றவங்க நேரா பிள்ளையார்பட்டிக்கே வந்துரலாம்.

இதுவரைக்கும் வராதவங்க வாங்க… வந்தவங்க… உங்க அனுபவத்த கமாமெண்டல சொல்லுங்க… அப்டீனு உங்களிடமிருந்து விடைபெறுவது ஹலோ மதுரை ரமேஷ் நன்றி வணக்கம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

மு,இரமேஷ் குமார்

மு.இரமேஷ்குமார். ஹலோ மதுரை மாத இதழின் நிறுவனர். நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: