வீடியோ

தொடர் வண்டியில் ஓர் தொலைதூரப் பயணம்

Train

லாங் ஜர்னினாலே டிரெய்ன் ஜர்னியதான் பலரும் கம்ஃபர்டபிள்ல ஃபீல் பண்ணுவோம். அத்தோட கடல், மலை, பள்ளத்தாக்கு, கிராமம், நகரம்ன்னு இயற்கை அழகை ரசிச்சிக்கிட்டே, அரட்டை அடிச்சிக்கிட்டே டிரெய்ன் ஜர்னி போனா செம ஜாலி தான். அதுவும் ஜன்னலோரம் உட்கார வாய்ப்பு கிடைச்சா அந்தப் பயணம் அலாதி சுகம் தான். இந்தியால இருக்குற டிரெய்ன்ல ரொம்ப தூரம் டிராவல் ஆகுற பத்து டிரெய்ன் பத்தி தான் பாக்க போறோம்..

என்ன ஒரே பில்டப்பா இருக்கேன்னு பாக்கறீங்களா … இப்படி இந்தியாவுல லாங் ஜர்னி போக வாய்ப்பு இருக்கற பத்து முக்கியமான டிரெயினப் பத்திதான் நாம இப்ப தெரிஞ்சக்கப் போறோம்… நம்ம லிஸ்ட்ல 10 வது இடத்துல இருக்குது டேராடூன் கொச்சுவேலி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ். இந்த ட்ரெய்ன பாத்தோம்னா உத்தரகாண்ட் தலைநகர்ல இருந்து கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரம் வரை டிராவல் ஆகுது. 9 மாநிலங்கள மற்றும் 24 ஸ்டேசன கடந்து 3154 கி.மீ டிராவல் ஆகுது. இந்த டிரெய்னோVட டைமிங் ஹவர் பாத்தோம்னா 57 மணி நேரம் 25 நிமிசம் பயணமாகுது.

அடுத்து 9வது இடத்துல இருக்கு அமர்தசரஸ் கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் இந்த ட்ரெய்ன் வந்து பஞ்சாப் மாநிலத்தில இருந்து தெற்கே திருவனந்தபுரம் வர 7 மாநிலங்கள் மற்றும் 24 ஸ்டேசன கடந்து 3295 கி.மீ டிராவல் ஆகுது. இந்த ட்ரெயினோட டைமிங் ஹவர்ஸ் வந்து பாத்தோம்னா 57 மணி நேரம் 20 நிமிசம்.

அடுத்த 8வது இடத்துல இருக்கு கேரள சம்பர்க் கிரந்தி எக்ஸ்பிரஸ். இந்த ட்ரெயின் திருவனந்தபுரத்துல இருக்க கொச்சுவேலியில இருந்து பஞ்சாப் மாநிலத்தில இருக்குற சண்டிகர் வரை 22 ஸ்டேசன கடந்து 3395 கி.மீ டிராவல் ஆகுது. இந்த ட்ரெயினோட டைமிங் என்னான்னா 54 மணி நேரம் 25 நிமிசம்.

அடுத்து 7வது இடத்துல இருக்கு ராப்டிசாகர் எக்ஸ்பிரஸ். இந்த ட்ரெய்ன் கேரள மாநிலம் எர்ணாகுளத்துல இருந்து பீகார் மாநிலத்துல இருக்கு பரவுனி வரை, 8 மாநிலங்கள் மற்றும் 60 ஸ்டேசன கடந்து 3438 கி.மீ.டிராவல் ஆகுது. இந்த எக்ஸ்பிரஸ் ட்ரெயினோட டைம் பாத்தோம்னா 62 மணி நேரம்.

நம்ம லிஸ்ட்ல 6வது இடத்துல இருக்கு திப்ருகார் எக்ஸ்பிரஸ். இந்த ட்ரெய்ன் அசாம்ல இருக்குற திப்ருகார் பக்கதுல நியூ டின்சுகியாவில இருந்து பெங்களூரு வரை 7 மாநிலங்கள் மற்றும் 35 ஸ்டேசன கடந்து 3547 கி.மீ டிராவல் ஆகுது. குவஹாத்தி, கொல்கத்தா, புவனேஸ்வர், விசாகப்பட்டினம், விஜயவாடா, என முக்கிய சிட்டிகள கடந்து 68 மணி நேரம் டிராவல் ஆகுது.

அடுத்து 5வது இடத்துல இருக்கு குவஹாத்தி எக்ஸ்பிரஸ். திருவனந்தபுரத்துல இருந்து அசாமோட தலைநகரான குவஹாத்தி வரை 7 மாநிலங்கள் மற்றும் 48 ஸ்டேசன கடந்து 3553 கி.மீ டிராவல் ஆகுது குவாஹத்தி எக்ஸ்பிரஸ். வாரத்துக்கு ஒரு தடவ மட்டும் இயக்குற இந்த ட்ரெய்ன் 65 மணி நேரம் டிராவல் ஆகுது.

அடுத்த 4வது இடத்துல இருக்கு நாவ்யுக் எக்ஸ்பிரஸ். கர்நாடகா மாநிலம் மங்களூருல இருந்து காஷ்மீர் மாநிலம் ஜம்மு வரை 12 மாநிலங்கள் மற்றும் 61 ஸ்டேசன கடந்து 3607 கி.மீ ட்ராவல் ஆகுது இந்த ட்ரெய்ன். காலிகட், கோயம்புத்தூர், விஜயவாடா, குவாலியர், ஆக்ரா, டெல்லி என முக்கிய சிட்டிய கடந்து 68 மணி நேரம் டிராவல் ஆகுது.

அடுத்து நம்ம லிஸ்ட்ல 3வது இடத்துல இருக்கு டென்ஜம்மு எக்ஸ்பிரஸ். இந்த ட்ரெய்ன் பாத்தோம்னா நம்ம தமிழ்நாட்டுல இருக்குற திருநெல்வேலியில இருந்து காஷ்மீர் மாநிலம் கத்ரா வரை 11 மாநிலங்கள் 62 ஸ்டேசன் கடந்து மொத்தம் 3631 கி.மீ.டிராவல் ஆகுது. வாரத்துக்கு ஒரு தடவ மட்டும் இயக்குற இந்த ட்ரெய்ன் 71 மணி நேரம் 20 நிமிசம் டிராவல் ஆகுது.

அடுத்து 2வது இடத்துல இருக்கு ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ். இந்த ட்ரெய்ன் வந்து இந்தியாவின் கடைகோடியான குமரியிலிருந்து காஷ்மீர் வரை டிராவல் ஆகுது. 12 மாநிலங்கள் மற்றும் 73 ஸ்சேன் கடந்து 3787 கி.மீ. டிராவல் ஆகுற இந்த ட்ரெய்ன். வாரத்திற்கு ஒரு தடவ மட்டும் இயக்குற இந்த ட்ரெயின் 72 மணி நேரம் டிராவல் ஆகுது.

இந்த டாப் 10 லிஸ்ட்ல மொத இடத்தில இருக்கு விவேக் எக்ஸ்பிரஸ். இது அசாம் மாநிலத்தில இருக்குற திப்ருகர்ல இருந்து நம்ம தமிழ்நாட்டுல இருக்குற கன்னியாகுமரி வரை 55 ஸ்டேசன் கடந்து 4286 கி.மீ டிராவல் விவேக் எக்ஸ்பிரஸ். சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாள நினைவு கூறும் விதமா துவக்கப்பட்ட இந்த இந்த ட்ரெய்ன்80 மணி நேரம் 15 நிமிசம் டிராவல் ஆகுறு இந்த டிரெய்ன்.

வீடியோவாக கண்டு ரசியுங்கள்

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: