தேர்தல் போட்டி: திமுகவினர் சார்பில் அலங்காநல்லூரில் சிறப்பு பூஜை
Special Puja at Alankanallur on behalf of DMK

மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு, தலைவர், கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடைபெறுவதை யொட்டி திமுக கட்சி சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
நடைபெற்ற இந்த பூஜையில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு, தலைவர், கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடைபெறுவதை யொட்டி, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கென்னடி கண்ணன், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் தனராஜ்.
மற்றும் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், ஒன்றிய சேர்மன் பஞ்சு அழகு, முன்னாள் பேரூராட்சி சேர்மன் ரகுபதி, நகரச் செயலாளர் ராஜேந்திரன்,
முன்னாள் நகரச் செயலாளர் சாமிநாதன், இடையபட்டி நடராசன், இளைஞர் அணி அமைப்பாளர் சந்தை கருப்பு, மருது உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, அலங்காநல்லூர் முனியாண்டி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.