தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க மதுரை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்
Madurai Corporation News

தமிழ்நாட்டில் ஐந்தாவது தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணி மீண்டும் தொடங்கப்பட உள்ளது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதலுடன் இந்திய மக்கள் தொகை ஆராய்ச்சி மையம் மற்றும் சென்னை எஸ்.ஆர்.எம். இண்டஸ்டியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி நிறுவனம், பொதுநலக் கல்வித்துறை இணைந்து நடத்துகின்ற தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணி தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் தொடங்கியுள்ளது.
தாய்சேய் நலம், குழந்தை பிறப்பு, இறப்பு, ஊட்டச்சத்து, இரத்தசோகை, கருவுறுதல் மற்றும் குடும்ப கட்டுப்பாடு சேவைகள், சுகாதாரம் சார்ந்த திட்டங்களின் மதிப்பீடு பற்றிய தகவல்களை சேகரிப்பதே இக்கணக்கெடுப்புப் பணியின் முக்கிய நோக்கம் ஆகும். இக்கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ள வரும் களப்பணியாளர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட நகர பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து தகவல்களை சேகரிப்பார்கள்.
இந்த தேசிய குடும்பநல கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.