செய்திகள்விவசாயம்

தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க கோரி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் தேங்காய் உடைக்கும் போராட்டம்

The Tamil Nadu Coconut Farmers Association is protesting against the fall in coconut prices

கொப்பரை தேங்காய் கிலோ ரூ.140 வீதம் கொள்முதல் செய்திட கோரியும், கேரளத்தை போல் உரித்த தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 50வீதம் அரசு கூட்டுறவு சங்கத்தின் மூலம் கொள்முதல் செய்திட கோரியும், தேங்காய் எண்ணெயை ரேஷன் கடை மூலம் வழங்கிட கோரியும், மாவட்டம் தோறும் தேங்காய் எண்ணெய் ஆலை அமைத்திட கோரியும், விவசாயிகள் விளைவிக்கும் அனைத்து பொருள்களுக்கும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்திடக் கோரியும், தமிழ்நாடு சென்னை விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்ட குழு சார்பில் வாடிப்பட்டியில், ஆர். ஐ. அலுவலகம் முன்பு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு, தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ச.சீத்தாராமன் தலைமை வகித்தார். போராட்டத்தை துவக்கி வைத்தார். சங்கத்தின் ,மாவட்டச் செயலாளர் பி.நாகேந்திரன் பேசினார். தொடர்ந்து, கோரிக்கை விளக்கி தென்னை விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் வி.ஆர்.முத்துபேயாண்டி, மாவட்டத் தலைவர் ஏ.பிச்சை, உமர்தீன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட த் தலைவர் ஏ.வேல்பாண்டி, கருப்பட்டி பாசன விவசாயிகள் சங்கம்அப்பாஸ், ஆகியோர் விளக்கி பேசினார்கள்.

போராட்டத்தை நிறைவு செய்து வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் எஸ்.பி.இளங்கோவன்
பேசினார். போராட்டத்தின் நிறைவாக, தேங்காய் விலை வீழ்ச்சியினை தடுத்து நிறுத்திட கோரி 100க்கு மேற்பட்ட தேங்காய்களை சாலை உடைத்து தங்களது எதிர்பபினை அரசுக்கு தெரிவித்தனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: