
#மீன்அமிலம் #தென்னை #தேங்காய்
பயண அனுபவம்
நண்பர் பிரசன்னா அவர்கள் மூலமாக அறிமுகம் ஆனவர்தான் எஸ்.கே.சந்திரன் ஐயா அவர்கள். 65 வயது இளைஞர். விவசாயம் மீது அவருக்கு இருக்கும் காதல் மீன் குட்டை, அசோலா, மண் புழு உரம், தென்னை, கொய்யா, மீன் அமிலம் என ஒருங்கே தனது ஒருங்கிணைந்த பண்ணையில் வைத்துள்ளார்.
தென்னையில் குரும்பை உதிர்வை கட்டுப்படுத்த, மீன் அமிலம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்று நம்மிடம் தெரிவித்தார். ஒரு வெட்டுக்கு 2000 காய்கள் மட்டுமே பெற்றிருந்த நிலையில், மீன் அமிலம் பயன்படுத்தி 4000க்கும் மேற்பட்ட காய்களை மகசூலாக எடுத்து வருகிறார் என்ற தகவலை நம்மிடம் தெரிவித்தார்.
அதன் பின்பாக இந்த தகவல் தென்னை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றதனால், மீன் அமிலம் தயாரிக்கும் முறை குறித்தும், அதனை எப்படி தென்னை வேர் பகுதியில் பயன்படுத்துவது என்பது குறித்தும், இந்த வீடியோவில் பதிவு செய்துள்ளேன். தொடர்ச்சியாக எஸ்.கே.சந்திரன் ஐயா பண்ணையில் உள்ள மற்ற விவசாய தொழில்நுட்பம் குறித்து பதிவு செய்வோம்.
இந்த வீடியோ நிச்சயமாக தென்னை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன். மீண்டும் வே று ஒரு விவசாய களத்தில் சந்திப்போம். மறக்காமல் உங்கள் கருத்துக்களை எனக்குத் தெரிவியுங்கள். நன்றிகள்.
___________________________________________________
நாட்டு தென்னையில் சாதனை | நான்கு ஆண்டில் நல்ல பலன்
தென்னை சாகுபடியில் சாதனை செய்துள்ளார் விவசாயி திரு.ஒ.சின்னமல்லன் அவர்கள். நான்கு ஆண்டில் நாட்டு தென்னையில் இளநீர் பறித்து விற்பனை செய்து வருகின்றார். தற்போது மாதம் ரூ.20,000 முதல் 25,000 வரை வருமானம் பெற்று வருகின்றார். வரும் காலங்களில் கூடுதலாக வருமானம் பெற வாய்ப்பு அதிகம் உள்ளது என்கிறார்.
முக்கியமாக தென்னையில் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக் கூடாதவைகள் குறித்து மிக தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளார். மேலும் உர மேலாண்மை குறித்து நீண்ட ஆலோசசை வழங்கியுள்ளார். இந்த தகவல்கள் தென்னை விவசாயிகளுக்கு நல்ல பலனாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
இவரது முறையை கடைபிடித்தால், நாட்டுத் தென்னையில் நிச்சயமாக ஒவ்வொரு தென்னை விவசாயும் கூடுதல் மகசூல் மற்றும் இலாபத்தை நிச்சயமாக ஈட்டலாம். தென்னை சார்ந்த கூடுதல் விவரங்களுக்கு ஒ.சின்னமல்லன் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 📞 8754966272 📞 7639555999.
________________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh – 📞 95 66 53 1237. ( Reporter – Whats app )
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
🔵 App Link: https://play.google.com/store/apps/de…
🔵Online Web Tv : https://hellomaduraitv.com/
🔵 Facebook :https://www.facebook.com/hellomaduraitv
🔵 Hello Madurai News website : https://hellomadurai.in/
🔵 Agri News website : https://tamilvivasayam.com/
🔵 Amma Samaiyal Food website : https://ammasamaiyal.com/
🔵 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________